• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5 வது வார்டில் மருத்துவ முகாமை துவக்கி வைத்த வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி

September 22, 2024 தண்டோரா குழு

திமுக பவள விழாவை முன்னிட்டு கோவை மாநகராட்சி 5 வது வார்டில் மருத்துவ முகாமை வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 5-வது வார்டு சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட விஸ்வாசபுரம் 5வது வார்டு திமுக,லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட், முத்துஸ் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாமை நடத்தியது.இந்த முகாமை கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தெ.ஆ.ரவி துவக்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி , சிறுபான்மை உரிமை பிரிவு மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான் மற்றும் பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி,மாமன்ற உறுப்பினர் நவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவ முகாம் குறித்து வார்டு செயலாளர் கண்ணன் பேசுகையில்:-

திமுக பவள விழாவை முன்னிட்டு
லயன்ஸ் பப்ளிக் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் முத்தூஸ் மருத்துவமனை இணைந்து மாபெரும் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.இந்த முகாமை மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி,துணை செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் ஆரோக்கிய ஜான்,பகுதி கழக செயலாளர் பொன்னுசாமி,வார்டு கவுன்சிலர் நவீன் உள்ளிட்டோர் இந்த முகாமை துவக்கி வைத்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள் பயன் பெறும் வகையில் குழந்தைகள் பொதுநல பரிசோதனை, சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை ,ஆறாத புண் மற்றும் சக்கரை நோயினால் ஏற்பட்ட புண்களுக்கு சிகிச்சை,கை,கால்,மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளவர்களுக்கான ஆலோசனை,இருதய மாரடைப்பு சிகிச்சைகளுக்காக ஆலோசனை , பித்தப்பை கல் மற்றும் குடல் இறக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை கண்டறிதல் மற்றும் ஆலோசனை வழங்கப்பட உள்ளது. இந்த முகாம் காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறுகின்றது. இந்த வார்டுக்கு உட்பட்ட சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைய உள்ளனர் என தெரிவித்தார்.

மேலும் இந்த மருத்துவ முகாமில் துணை செயலாளர் வி.சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க