• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முதல் முறையாக ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் மாணவர்களுக்கான சாகச விளையாட்டுகள் துவக்கம்

September 23, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியா பகுதியில் உள்ள ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை சாகச விளையாட்டுகளை ஏற்பாடு செய்திருந்தது. இதனை ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளி தலைமை ஆசிரியை உமா துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இதுகுறித்து அவர் பேசுகையில்,

ஜி.ஆர்.ஜி கல்விக்குழுமம் இது போன்ற புதுவிதமான முயற்சிகளைக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதன் மூலம் பள்ளி மாணவ மாணவியர்கள் படிப்பு மட்டுமல்லாமல் இதுபோன்ற சாகச விளையாட்டுக்களிலும் ஈடுபடுவதால் அவர்களின் எதிர்காலமும் சிறந்து விளங்கும் என்றார்.

மேலும், ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் அனைத்து மாணவர்களுக்காக துவங்கப்பட்ட இந்த சாகச விளையாட்டுகள் இனி ஆண்டுதோறும் நாங்கள் தொடர்ந்து நடத்த முடிவு செய்துள்ளோம்.அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்வுகளை பள்ளிக் குழுமத்தின் மூலம் நிகழ்காலங்களில் மாணவர்களுக்காக கொண்டு வருவதில் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.

ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளியில் நடத்தப்படும் இந்த சாகச விளையாட்டுகளானது மாணவர்களின் மனதிற்கும், உடலுக்கும் வலிமையைத் தரக்கூடிய வகையில் நன்கு பயிற்சி பெற்ற நிபுணர்கள் தலைமையிலான குதிரை சவாரி (HORSE RIDING), விஞ்ஞான அறிவினை மேம்படுத்தும் வகையிலான விமானங்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாடு உள்ளடக்கிய செயல்பாடுகள் குறித்து ஏரோமாடலிங் (AEROMODELLING) மற்றும் வில்வித்தை (DISCOVER THE THRILL OF ARCHERY) போன்ற விளையாட்டுகள் நடைபெற்றன.
இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் இருந்தும் 5 வயது முதல் 15 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.

இறுதியில், விளையாட்டுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளியின் தலைமை ஆசிரியை உமா சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளையும் தெரிவித்தார்.

தற்போது வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில் மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் வகையில் ஜி.ஆர்.ஜி மாடர்ன் ஸ்காலர்ஸ் கேம்பிரிட்ஜ் பள்ளி இந்த முன்முயற்சியின் மூலமாக பல்வேறு மாணவ, மாணவியர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க