September 27, 2024
தண்டோரா குழு
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த 26.08.2024 அன்று சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்து இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் (40) என்பவரை பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதி மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக சஞ்சயகுமார் சமல் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரை செய்தார். அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் வழக்கு குற்றவாளியான சஞ்சயகுமார் சமல்-யை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.