September 28, 2024 தண்டோரா குழு
கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உயர்கல்வி நிறுவனங்களான கலை அறிவியல் கல்லூரியும், கல்வியியல் கல்லூரியும் ,மாருதி உடற்கல்வியியல் கல்லூரியும் இணைந்து சனிக்கிழமையன்று நாடகங்களின் சங்கமமான “ஸ்வரம் 2024” நாடகப் போட்டியை நடத்தியது.
“இந்திய மகான்களும் அருளாளர்களும்” என்பது நிகழ்ச்சியின் பொருண்மையாகும். மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான இந்த நாடகப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் தொடக்கமாக வித்யாலய இசையாசிரியர்கள் இறைவாழ்த்து இசைத்தனர்.
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அ.முத்துசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். மாருதி உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் தி.ஜெயபால் அவர்கள் நிகழ்ச்சி குறித்து அறிமுகம் செய்தார்.தொடர்ந்து மாணவர்களின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன.இப்போட்டியில் மொத்தம் 11 கல்லூரிகள் பங்கேற்றன.மொத்தம் 201 மாணவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.இவர்களுள் 84 பேர் ஆண்கள் ,117 பேர் பெண்கள்,உடன்வந்த பேராசிரியர்கள் 16 பேர்.கோயம்புத்தூர் பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர் டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி,கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம்,ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி , கோபி செட்டிபாளையம் பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரி,டாக்டர் எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி ஆகிய ஆறு கல்லூரிகளிலிருந்து பெண் போட்டியாளர்களும்,பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி,பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரி,ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, ஸ்ரீ சர்ஸவதி தியாகாஜா கல்லூரி ஆகிய ஐந்து கல்லூரிகளிலிருந்து ஆண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.
நாடகங்களை மதிப்பீடு செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க கோயம்புத்தூர் தி.அ.தி.கலாநிலையம் நடுநிலைப்பள்ளித் தமிழாசியரியர் முனைவர் கி.தத்தாத்ரேயன்,கோயம்புத்தூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய சிவானந்தா மேனிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் K.சதீஷ்குமார் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர் N.ஈஸ்வரன், சாரதா மகளிர் குழுவினரான T.C.மகேஸ்வரி, T. விஜயலட்சுமி, P.சுகன்யா ஆகியோர் நடுவர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாடகப் போட்டியில் திருநாவுக்கரசர் என்ற தலைப்பில் நாடகம் வழங்கிய கோயம்புத்தூர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், அபிராமி பட்டர் என்ற தலைப்பில் நாடகம் வழங்கிய ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும்,மங்கையர்க்கரசி என்ற தலைப்பில் நாடகம் வழங்கிய கோயம்புத்தூர் பூசாகோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மூன்றாம் இடத்தையும், காரைக்கால் அம்மையார் என்ற தலைப்பில் நாடகம் வழங்கிய கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர்.மகளிர் கலைக் கல்லூரி நான்காம் இடத்தையும், சுந்தரமூர்த்திநாயனார் என்ற தலைப்பில் நாடகம் வழங்கிய டாக்டர் எஸ்.என்.எஸ். கல்வியியல் கல்லூரி ஐந்தாம் இடத்தையும் வென்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு வித்யாலய செயலர் சுவாமி கரிஷ்டானந்தர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.முதற்பரிசாக ரூ.15000 + சான்றிதழ், சுழற்கோப்பை , இரண்டாம் பரிசாக ரூ.12000 + சான்றிதழ் , மூன்றாம் பரிசாக ரூ.10000 + சான்றிதழ், நான்காம் பரிசாக ரூ.7500 + சான்றிதழ் , ஐந்தாம் பரிசாக ரூ.5000 + சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.
போட்டியாளர்கள் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஸ்வரம் -2024 நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர். போட்டியாளர்கள், பணிசெய்தோர் முதலியோருக்கு ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் வே.ஸ்ரீனிவாசன் நன்றி தெரிவித்தார்.