October 3, 2024 தண்டோரா குழு
கோவை மருதமலை சாலை சீரநாயக்கன்பாளையம் பி.என்.புதூரில் புத்தம் புதிய அல்வியல் பன் சவ்வி மாலில் பிவிஆர் ஐனாக்ஸ் 5 ஸ்கிரீன் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டது.நாடு முழுவதும் 144 திரைகளை கொண்டுள்ள அதிநவீன வசதி கொண்ட பிவிஆர் ஐனாக்ஸ்,தமிழ்நாட்டில் 24வது திரைப்பட அரங்காகவும்,கோவையில் 20 திரைகளையும் 3 இடங்களையும் கொண்டுள்ளது.
தென்னிந்திய அளவில் தடம் பதித்துள்ள இந்த நிறுவனம்,விரிவாக்க நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.சர்வதேச தரத்தில் திரைப்பட அனுபவங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.அல்வியல் ஃபன் சவ்வி மாலில் 5 அரங்குகளில் 894 இருக்கைகளை கொண்டுள்ளது.புதிய அதிநவீன தொழில்நுட்பத்தால் திரைப்பட ரசிகர்களை கவர்ந்துள்ளது.படம் பார்க்க சொகுசான அனுபவம்,அருமையான நவீன வடிவமைப்பு, அதிநவீன திரைப்பட தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.
வெளி உலகிலிருந்து,பொழுதுபோக்கு உலகிற்கு அழைத்து செல்லும் நுழைவாயிலில் விருந்தினர்களை வரவேற்க விசாலமான வியக்க வைக்கும் இடவசதி செய்யப்பட்டுள்ளது.நெரிசலே இல்லாமல் எளிதாக செல்ல வசதியுள்ளதாகவும், அரங்குகளில் திரைப்பட விபரங்களும் காட்சிப்படுத்தப்படுகிறது.நடைபாதையின் இதய மத்திய பகுதியில் அருமையான சூழலில், அம்சமான,வளைவான அழகிய வடிவமைப்புகளும் இடம் பெற்றுள்ளன. அடுக்கடுக்கான கூரையின் வடிவமைப்பும், ஜொலிக்கும் தொங்கு கற்கள் இடத்துக்கு அழகூட்டுகின்றன. ரசிகர்களுக்கு மகிழ்வான சூழலை ஏற்படுத்துகிறது.
அல்வியல் மாலில் உள்ள ஐந்து பிவிஆர் – ஐனாக்ஸ் அரங்குகளில் வசதியான நகரும் இருக்கை வசதிகள்,கால்களை வசதியாக வைத்துக் கொண்டு,படம் பார்க்கும் அனுபவம் புதுமையாக இருக்கும். சிவப்பு, தங்கநிற மஞ்சள்,ஊதா மற்றும் பச்சை வண்ணம் என்ற நான்கு கலவைகளில் புதிய சூழல் உருவாகியுள்ளது.நான்கு அரங்குகளில்,2கே லேசர் குவிக்கு தொழில்நுட்பம்,டால்பி 7.1 ஒலி அமைப்பும், மற்றும் ஒரு அரங்கில் டால்பி 7.4 ஒலியும், உச்ச ஸ்ருதியிலான ஒலியும் ஈடுஇணையற்ற ஆழ்ந்த அனுபவத்தை தரும்.
அல்வியல் மாலின் சிறப்பம்சங்கள், வாகனங்கள் நிறுத்த விசாலமான இட வசதி. கூட்டமாக இருந்தாலும், எளிதாக சென்று வர நெரிசல் இல்லாத நிறுத்தம் உள்ளது.