October 4, 2024 தண்டோரா குழு
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து,போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில்,கோவில்பாளையம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் வையாபுரி நகர் அருகே சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரிடம் சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் மகன் பிரகாஷ்(56) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.