October 8, 2024 தண்டோரா குழு
கோயமுத்தூர் சரகத்திற்கு உட்பட்ட மாவட்டங்களான திருப்பூர்,ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிதாக பணியில் சேர்ந்த நேரடி உதவி ஆய்வாளர்களுக்கான புலனாய்வு நுணுக்க பயிற்சி வகுப்பு கோயமுத்தூர் பணியிடை பயிற்சி மையத்தில் நடத்தப்பட்டது.
கோயமுத்தூர் சரகத்தில் குற்றங்களை தடுக்கவும்,குற்ற வழக்குகளை நவீன முறையில் புலனாய்வு மேற்கொள்ளுதல், நீதிமன்ற நடவடிக்கைகளில் புலனாய்வு அதிகாரி திறம்பட செயல்படுதல்,புலனாய்வு நடைமுறைகள் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனைகளை அதிகப்படுத்தும் விதமாக குற்ற வழக்கை வெற்றிகரமாக நடத்துதல் குறித்த இப்பயிற்சி வகுப்பினை B. சக்திவேல்,காவல் துணை கண்காணிப்பாளர் ( ஓய்வு ) மற்றும் A.ராமன்,கூடுதல் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களை கொண்டு சிறப்பான முறையில் நடத்தப்பட்டது.
கோயமுத்தூர் சரக காவல் துறை துணைத் தலைவர் A.சரவண சுந்தர் முன்னிலையில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் T. செந்தில்குமார்,இப்பயிற்சியின் நோக்கம் குறித்தும்,புலன் விசாரணையின் நுணுக்கங்கள் குறித்தும்,பொதுமக்களை கண்ணியமாக நடத்துவது குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.
இப்பயிற்சி வகுப்பில் திருப்பூர்,ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 16 காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.