• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பணிபுரியும் இடங்களில் மன நலத்திற்கு முன்னுரிமை வழங்கும் காலம் இது – மன நல மருத்துவர் என்.எஸ்.மோனி

October 9, 2024 தண்டோரா குழு

உலக சுகாதார நிறுவனம் WHO ( world Health organization) ஒவ்வொரு வருடமும் உலக மனநல நாளை (world Mental Health Day) அக்டோபர் 10ஆம் தேதி கொண்டாடுகின்றது.

இந்த ஆண்டு உலக மனநல நாளில் விவாதிக்கும் தலைப்பு கருப்பொருள். “Mental health at work” It is time to prioritize Mental Health at work place.(பணிபுரியும் இடங்களில் மன நலத்திற்கு முன்னுரிமை வழங்கும் காலம் இது)
இந்தியாவில் உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் தேசம்.இந்திய மக்கள் தொகையில் சுமார் 50% (65 கோடி) பேர் 20 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவர்கள்.கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே அவர்களின் வயதிற்கும் கல்விக்கும் உடல் தகுதிக்கும் ஏற்றவாறு ஏதேனும் ஒரு வேலையில் அல்லது தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களாக இருப்பார்கள்.

உழைப்பு என்பது உடலும் மனதும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய ஒரு விஷயம்.ஒருவர் முழுமையான வேலை திறனை வெளிப்படுத்த அவர் உடலாலும் மனதாலும் முழு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சாத்தியம்.ஒவ்வொருவரும் சராசரியாக நம் வாழ்வில் தினசரி மூன்றில் ஒரு பங்கை நம் பணியிடத்தில் கழிக்கிறோம் என்று சொல்வதை விட வாழ்கிறோம் என்று சொல்லலாம்.

நாம் அனைவரும் நம் மனதில் கை வைத்து கேட்க வேண்டிய கேள்வி இந்த மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கையை எந்த அளவிற்கு திருப்தியாக பரிபூரணமாக சந்தோஷமாக, சுதந்திரமாக (பணி சார்ந்து, பொருளாதார, பதவி சார்ந்த உயர்வு தாழ்வுகள்) உணர்கிறோம், உணர்ந்திருக்கின்றோம்.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சுமார் 45% பணியாளர்கள் (பொறுப்பு வேறுபாடு இன்றி).ஏதோ ஒரு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளர் என்று தெரியவந்துள்ளது.

வேலைப்பளு சார்ந்த மன அழுத்தம் , காரணமாக, மனச்சோர்வு, மனப்பதற்றம், அச்சம், எரிச்சல், கோபம், புலம்பல், எதிர்மறை எண்ணங்கள், அழுகை, ஆத்திரம், உடல் பருமன் அல்லது எடை குறைவு , போன்ற பிரச்சனைகளும் அதனால் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுன்றி அவர்கள் வேலைத்திறன், வேலை சார்ந்து முடிவு எடுக்கும் திறன், ஆகியவை பாதிக்கப்படுகின்றது.

தன்னுடைய திறமைக்கும் நிறுவனத்தின் எதிர்பார்ப்புக்கும் இடையில் ஏற்படும் இடைவெளியால் ஏற்படும் மன அழுத்தம் தவிர பணியிட சூழல், பணி நேரம், ஊதியம் அவசியம், பணியாளர் நலன்கள், தேவையான போது விடுமுறை கிடைக்காமல் இருப்பது, சக ஊழியர்களின் ஒவ்வாமை, வாழ்வியல் முறையில் பிரச்சனைகள், குடும்பப் பிரச்சினைகள், பொருளாதார பிரச்சனை, சொந்த பழக்க வழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள், மனதளவில் அவதிப்படுகின்றேன் என்று மனதளவில் வெளிப்படையாக சொல்லாமல் தனக்குள் துன்புறும் மன நிலையால் அதுவே மன அழுத்தம், மனச்சோர்வை உருவாக்கி இது பல வருடங்களாக தொடர்ந்தால் அதுவே டென்ஷன், தலைவலி, முடி உதிர்தல், ஞாபக மறதி, இளநரை, எரிந்து விழுதல், தோற்றத்தில் மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், நரம்புசம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இருதய நோய், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், உடல் பருமன், இடுப்பு வலி, கை கால் குடைச்சல், மூட்டு வலி, போன்ற பிரச்சனைகள் உருவாகின்றன.

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது பணியாளர்களுடன் சமூகமான உறவை வைத்துக் கொள்வது மட்டும் அல்லாமல் அவர்களுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும். அன்பு ,அனுதாபம் , தேவையான நேரத்தில் சிறு சிறு உதவிகள் பணமோ மற்ற உதவியோ ,அவர்களுடைய குடும்பத்திற்கான மருந்து செலவில் குழந்தைகள் படிப்பில் முடிந்த சிறிய உதவிகள் செய்ய வேண்டும். உதவிகள் கேட்கும்போது உதாசினம் செய்யக்கூடாது. முடியவில்லை என்றால் அன்பாக, பொறுமையாக பேசி இயலாத உண்மையான காரணத்தை தெளிவு படுத்த வேண்டும்.

அவர்களுடைய உடல் நலம், மனநலம், குடும்ப நலம் பற்றி பேசி, அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்தல் அவசியம். பணி நேரத்தில் இடைவெளியில் தேநீர் மற்றும் மதிய உணவிற்கு நேரம் ஒதுக்குதல், சுத்தம் சுகாதாரமான பணியிடம் தேவையான அளவிற்கு சுதந்திரம் கொடுத்தல் சக ஊழியர்கள் ஒரு நாள் சுற்றுலா (பிக்னிக்) செல்ல அனுமதித்தல், அவ்வப்போது அனைவரும் சந்தித்து பிரச்சனைகளை பகிர்ந்து, அதன் பின் ஒன்று சேர்ந்து உணவு உண்ணுதல் ஆகியவை. தன்னம்பிக்கை வளர்ப்பது மட்டும் அல்லாமல் வேலை பார்க்கும் இடத்தில் சூழ்நிலையை மாற்றி அமைக்கும். அதே நேரத்தில் தவறுகளை சுட்டி காட்டி அதை புரிய வைத்தால் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு உதவும்.

மன ஆரோக்கியம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் சாத்தியமில்லை. பணியாளர்கள் அனைவருக்கும் தான் வேலை செய்யும் துறையில் உச்சத்தை அடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கலாம்.இன்றைய காலகட்டத்தில் நம் முதல் லட்சியம் நம் மனம், உடல் ஆரோக்கியம் தான்.தினசரி சந்தோஷமாக வாழ்வதை தொலைத்துவிட்டு என்றோ ஒரு நாள் அடையும் வெற்றிக்கு மனதை குழப்பிக் கொண்டு இருக்கக் கூடாது. பணியிடத்தில் மன ஆரோக்கியம் பெற

1.நேர மேலாண்மை (time management),
குடும்பம், தொழில், தன்னலம் சார்ந்து நம்முடைய நேரத்தை திட்டமிட வேண்டும்.

2.தினசரி உடற்பயிற்சி/தியானம்/யோகா சரியான நேரத்தில் சரிவிகித உணவை உட்கொள்ளுதல் சரியான தூக்கம் மிக மிக முக்கியம்.

3.வருமானம்- செலவினம் இவற்றிற்கு இடையில் சமநிலையை பேண வேண்டும்.

4. தன்னுடைய அறிவு சார், உடல்சார், பொருளாதாரம், குடும்பம் சார்ந்த விஷயங்களை புரிந்து புதிய முயற்சிகள் , பொறுப்புகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

5.மிகவும் முக்கியம் பணியாளர்கள் தனிமனித ஒழுக்கம், மற்றும் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாக இருப்பது, அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்வது, தன்னால் முயன்ற அளவு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மன நிம்மதியை கொடுப்பது மட்டுமல்லாமல் பணியிட சூழ்நிலையை மாற்றி அமைக்கும்.

6.நிர்வாகம்/நிறுவனம் எல்லா பணியாளர்களிடம் சரி சமமாக நடந்து யாருக்கும் தனிப்பட்ட முறையில் முக்கியத்துவம் கொடுக்காமல் அவர்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து குறைகளை நிர்வாகத்திடம் சொல்லுங்கள். நிறைகளை வாடிக்கையாளர்களிடம் (நிர்வாகத்தை தேடி வருபவர்களிடம்) சொல்லுங்கள் என்று அவர்கள் மனதை பண்படுத்தினால் இருவருக்கும் வெற்றி நிச்சயம்.

DR.N.S.MONY MD(Psychiatry)
மன நல மருத்துவர் பாலாஜி முளை, நரம்பியல் மற்றும் மன நல மருத்துவ மையம்.

மேலும் படிக்க