• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2024-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற சர்வதேச கிரீன் கவுன் விருதினைப் பெறும் அம்ருத விஸ்வ வித்யாபீடம்

October 16, 2024 தண்டோரா குழு

அம்ருதா விஸ்வ வித்யாபீடம், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்பிற்காக 2024-ஆண்டிற்கான புகழ்பெற்ற சர்வதேச பசுமை கவுன் விருதைப் பெற்றுள்ளது. பெனிபிடிங் சொசைட்டி பிரிவின் கீழ், பல்கலைக்கழகத்தின் சமூக மேன்பாட்டிற்கான லிவ்-இன்-லேப்ஸ்Ⓡ முன்முயற்சியை இது எடுத்துக் காட்டுகிறது.

இது நடைமுறைக் கல்வி மட்டுமல்லாது, கிராமப்புற சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொண்டு நிலைத்தன்மையை மேம்படுத்தும் பல்துறை அணுகுமுறையை உள்ளடக்கியது.

அம்ருதா விஸ்வ வித்யாபீடம் மேலும் மூன்று பிரிவுகளில் பாராட்டுகளைப் பெற்றது:

● எனது கிராமம், எங்கள் தண்ணீர், என்னும் முயற்சியின் ஆழ்ந்த தாக்கத்தை பாராட்டுவதற்காகவும். மேலும் விவரங்களுக்கு: https://www.greengownawards.org/amrita-vishwa-vidyapeetham-india1

● நிலையான வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட E4Life PhD மேலும் விவரங்களுக்கு:
https://www.greengownawards.org/amrita-vishwa-vidyapeetham-india2

● இயற்கையை பாதுகாத்து வளர்ப்பதற்கான (அம்மாவின் இயற்கை மேம்பாட்டுத் திட்டங்கள்) முயற்சியாகவும். மேலும் விவரங்களுக்கு: https://www.greengownawards.org/amrita-vishwa-vidyapeetham-india3

இந்த ஆண்டு கிரீன் கவுன் விருதுகள் 8 துறைகளிலிருந்து 28 நாடுகளைச் சேர்ந்த சுமார் 95 பேரை உள்ளடக்கியது. உலகளவில்,நிலையான வளர்ச்சியை முன்நிறுத்துவதன் மூலம், கிரீன் கவுன் விருதுகள் உயர் கல்வித் துறையில் சிறந்த நடைமுறைக்கான மிகவும் புகழ்பெற்ற அங்கீகாரமாக கருதப்படுகிறது.

அம்ருதாவின் வேந்தர் ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி (அம்மா),2013-இல் லிவ்-இன்-லேப்ஸ்Ⓡ முயற்சியை துவக்கி வைத்தார்.இது அனுபவப்பூர்வமான நடைமுறை கல்வியில் ஓர் முன்னோடியாகத் திகழ்கிறது.இந்த பன்முகத் திட்டம் மாணவர்களை கிராமப்புற சமூகங்களுடன் இணைப்பது மட்டுமல்லாது, நிஜ உலக வாழ்க்கை சவால்களை உணர்ந்து எதிர்கொள்ள அவர்களை வழி நடத்துகிறது. நடைமுறை வாழ்வில் தங்கள் கல்வி அறிவைப் பயன்படுத்துவதன் மூலம், மாணவர்கள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள, ஓர் ஒப்பற்ற வாய்ப்பை பெறுகிறார்கள்.

லிவ்-இன்-லேப்ஸ்Ⓡ பங்கேற்பாளர்கள், உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் பொருள் நிபுணர்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்ப்பது மட்டுமல்லாது குறைந்த நிதியுடன் சிறந்த தீர்வுகளை கண்டறிய உதவுகிறது.

“சுற்றுச்சூழல் தலைமைத்துவத்திற்கான எங்கள் அர்ப்பணிப்புக்காக 2024-ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரீன் கவுன் விருதைப் பெறுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தின் நிலையான வளர்ச்சி பள்ளியின் பேராசிரியர் மற்றும் இயக்குனர் டாக்டர் மணீஷா வி ரமேஷ் கூறினார். “லிவ்-இன்-லேப்ஸ்Ⓡ முயற்சியானது, அனுபவமிக்க கற்றல் மூலம் நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

கிராமப்புற சமூகங்களுடன் மாணவர்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், மக்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல்,நிலையான வளர்ச்சிக்கான ஆழமான அர்ப்பணிப்பை வளர்ப்போம். இந்த அங்கீகாரம், சமூகத்தில் நீடித்த மாற்றத்தை உருவாக்க கல்வியின் சக்தியின் மீதான எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது.

நீதிபதிகளின் கூற்றுப்படி, “லிவ்-இன்-லேப்ஸ்Ⓡ என்பது தீர்வுகளைக் கண்டறிவது மட்டுமல்லாது, சமூகத்தின் பார்வையில் இருந்து பிரச்சனைகளை உண்மையாகப் புரிந்து கொள்வதாகும். இது மாணவர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.”

கிரீன் கவுன் விருது, எண்ணற்ற சமூக சவால்களை எதிர்கொண்ட ஒடிசாவின் தனிமைப்படுத்தப்பட்ட குப்தபாடா கிராமத்தில் லிவ்-இன்-லேப்ஸின் பணியை சிறப்பித்தது. தண்ணீர்ப் பஞ்சம்,மோசமான சுகாதாரம், வரையறுக்கப்பட்ட வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் ஆரோக்கியமில்லா சமையல் நடைமுறைகளால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் போன்ற முக்கிய சவால்களை எதிர்கொள்வதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.பொறியியல், பயோடெக்னாலஜி, சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை துறைகளை உள்ளடக்கிய கூட்டு முயற்சிகள் மூலம்- உலகளாவிய கூட்டாண்மைகளுடன்- புதுமையான தீர்வுகள் உருவாக்கப்பட்டன. நீர் வடிகட்டுதல் அமைப்புகள், புகையில்லா சமையல் அடுப்புகள், IoT அடிப்படையிலான காளான் வளர்ப்பு, திறன் பயிற்சி மையங்கள் மற்றும் கழிப்பறை கட்டுமானம் ஆகியவை இவற்றுள் அடங்கும். சமூக நல் வாழ்வில் நிலையான தீர்வுகளின் மாற்றத்தக்க தாக்கத்தை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

இந்த விருது அம்ருதாவின் நிலையான வளர்ச்சிக்கான கல்வியை நோக்கிய பணிக்கான சான்றாகும்.இடைநிலை அணுகுமுறை மூலம் முக்கியமான கிராமப்புற சவால்களை எதிர்கொள்வதன் மூலம், லிவ்-இன்-லேப்ஸ்® உலகெங்கிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது. மேலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்கினை இது எடுத்துக் காட்டுகிறது.

2004-இல் நிறுவப்பட்ட, சர்வதேச பசுமை கவுன் விருதுகள் உலகளவில் உயர் கல்வியில் சிறந்த நிலைத்தன்மை முயற்சிகளை அங்கீகரிக்கிறது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) அங்கீகரிக்கப்பட்டது மற்றும் காமன்வெல்த் பல்கலைக்கழகங்களின் சங்கம் (ACU) மற்றும் உயர் கல்வி நிலைத்தன்மை முன்முயற்சி (HESI) போன்ற மரியாதைக்குரிய நிறுவனங்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்த விருதுகள் நிலையான வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக் காட்டுகின்றன.

மேலும் படிக்க