• Download mobile app
18 Oct 2024, FridayEdition - 3173
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீடு பணிகள் இன்று துவக்கம்; ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் ஓர் புதிய முயற்சி

October 17, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து.இதற்கான அளவீட்டு பணியை ரோட்டரி மாவட்டம் 3201 உடன் கௌசிகா நீர் கரங்கள் இணைந்து இன்று (17.10.2024) துவக்கியுள்ளது.

பணி துவக்க விழா இன்று 17 அக்டோபர் 2024 காலை 11.00 மணிக்கு துவங்குகிறது. வையம்பாளையத்தில் உள்ள நாராயணசாமி நாயுடு மணிமண்டபத்தில் விழா நடந்தது. இதை ரோட்டரி கிளப் 3201 கவர்னர் சுந்தரவடிவேலு பணியைத் துவக்கி வைத்தார்.

இது குறித்து ரோட்டரி மாவட்டம் 3201 மாவட்ட ஆளுநர் ரோட்டேரியன் சுந்தரவடிவேலு கூறும்போது :-

உலக அளவில் போலியோ ஒழிப்பில் முன்னோடியாக திகளும் ரோட்டரி அமைப்பு. பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.
கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்புடன் இணைந்து கௌசிகா நதியை புதுப்பிக்கும் பணியை இன்று கோவை வையம்பாளையத்தில் துவக்குகிறது. கோவை மாவட்டத்தின் நதியாக திகழ்ந்த கௌசிகா நதி, 52 கி.மீ., நீளம் கொண்டது. குருடி மலையிலிருந்து உற்பத்தியாகி, நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையில், நதியாக மாறுகிறது.

வண்ணாற்றங்களை ஆறு என அழைக்கப்படும் இதன் கரைகளில் 3 வரலாற்று கால கோயில்களும் உண்டு. கொங்குநாட்டு வம்சத்தினரான கொங்கு சோழர்கள் கற்றாளியாக மாற்றி அமைத்தனர்.இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியின சமுதாயதத்தினரின் உரிமைகள் குறித்த கல்வெட்டுக்கள், கருவூலங்களாக உள்ளன. கோவில்பாளையம் தொட்டு நொய்யல் நதியில் திருப்புர் அருகே கலக்கிறது.

பழமையான புராணங்களிலும் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. அருணகிரி நாதர் தனது திருப்புகழ் பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளார்.நிலத்தடி நீர் மட்டம் குறைவாலும், பராமரிப்பு இல்லாததாலும் கௌசிகா நதி காலப்போக்கில் காணாமல் போனது. அது விட்டுச் சென்ற தடம் இன்றளவிலும் இருப்பதால், மீண்டும் அதன் பாதையை புதுப்பிக்க ரோட்டரி கிளப் 3201 முயற்சியில் இறங்கியுள்ளது.

கவுசிகா நதி தற்போது வரை உயிர்ப்புடன் உள்ளது.இந்த நதி மலை முகட்டில் கலிமுக பகுதியில் உற்பத்தியாகி 52 கிலோமீட்டர் தூரம் பயணித்து திருப்பூரை அடுத்து ஈரோட்டிற்கு முன்பு பவானி ஆற்றில் கலக்கிறது.இந்த நதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு கட்டங்களாக ஆய்வு மேற்கொள்ள திடடமிட்டுள்ளோம். மொத்த தூரத்தை 7 அல்லது 8 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பகுதி என பிரித்து கணக்கிட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ஒவ்வொரு கட்டத்தின் திட்ட செலவையும் பிரித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி குழுக்களின் பொறுப்பில் திட்ட செலவை ஏற்கும் வகையில் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளோம்.மொத்த திட்டத்திற்கு 160 கோடி ரூபாய் வரை செலவாகும் என மதிப்பட்டுள்ளோம். திட்டம் முடிவுற மூன்று ஆண்டுகள் வரை கூட ஆகலாம். கவுசிகா நதி புனரமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் ரோட்டரி சங்கம் இணைந்து சிறப்பாக செயலாற்றி இந்த நதியை முமுமையாக மீட்பதே எங்களின் இலக்கு. கௌசிகா நீர்க்கரங்கள் ஏற்கனவே சின்னவேடம்பட்டி ஏரியை புதுப்பித்துள்ளது. சுற்றிலும் மரங்களை நட்டு வளர்த்துள்ளது. கடந்த ஆண்டு சின்னவேடம்பட்டி ஏரியில் தண்ணீர் நிரம்பியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

சமுதாயத்தின் மீதும், இயற்கையை காப்பதிலும் பெரும் அக்கறை கொண்டுள்ள ரோட்டரி கிளப் 3201 மாவட்டம், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு உதவியுடன் கௌசிகா நதியை புதுப்பிக்கும் பணியை துவக்கியுள்ளது.இந்த நதியை புதுப்பித்தால், 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பயன்பெறும். குடிநீர் ஆதாரங்கள் பெருகும். என அவர் கூறினார்.

கவுசிகா நதி நீர் கரங்கள் அமைப்பின் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:

கவுசிகா நநியானது ஒரு காலத்தில் காட்டாராக இருந்தது. காலப்போக்கில் இந்த நதி ஆக்கிரமிப்புகள் காரணமாக குறுகி நின்றுவிட்டது. கவுசிகா நதி கௌவைக்கு முக்கிய நீதாரமாகும்.நொய்யல் நதியிலும் நீர் வரத்து குறைவாக உள்ள நிலையில் கோவையின் நீராதாரத்திற்கு பவானி ஆற்றை மட்டுமே நம்பி உள்ளோம். கவுசிகா நதி வழித்தடத்நில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து தடைகளை அகற்றினால் மீண்டும் ஜீவ நதியாக உருமாறி பிரவாகம் எடுக்கும். ஆவினாசி – அத்திக்கடவு திட்டத்தில் தடுப்பணைகள் கட்டி செறிவூட்டம் செய்யப்படதைப் போல, கவுசிகா நதியின் ஓட்டத்திலும் தடுப்பணைகள் கட்டுவதன் வாயிலாக நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும்.

இந்த நதி பாயும் வழியெங்கும் 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதிபெறும். கோவை மக்களின் தாகம் தீர்க்கும் ஜீவ நதியாக கவுசிகா நதி உருமாறும். அந்த உன்னத நோக்கத்தை நோக்கி எங்களது பயணத்தை துவககி உள்ளோம். அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் கவுசிகா நதி 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆனால் இந்த நதியில் இருந்து எடுக்கப்பட்ட கற்கள் கார்பன் பகுப்பய்வு செய்யப்பட்டதில் ஒரு லட்சம் வருடம் பழமையானது என தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், ரோட்டரி மாவட்ட பொது செயலாளர் சுப்ரமணியன், கொண்டையம்பளையம் பஞ்சாயத்து தலைவர் கோவிந்தராஜ், கௌசிகா நீர்க்கரங்கள் அமைப்பின் செயலாளர் சிவராஜா, அன்னூர் தாசில்தார் குமரி ஆனந்தன், ரோட்டரி கிளப் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் பத்மக்குமார், எஸ்.எஸ்.குளம் நகராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி, கௌசிகா நீர்க்கரங்கள் நிறுவனர் பி.கே செல்வராஜ், அத்திக்கடவு கௌசிகா நீர்க்கரங்கள் மேம்பாட்டு சங்கத்தின் செயலாளர் ஜி.விஜயபாபு, கோவில்பாளையம் காவல் துறை ஆய்வாளர் பி.செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க