October 19, 2024 தண்டோரா குழு
கோவை பூ சா கோ அர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் சிறுதுளி அமைப்பும் இணைந்து பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயாவில் வனம் என்ற பெயரில் மியாவாக்கி முறையில் 2200 மரம் நடும்
நிகழ்ச்சி இன்று (19 – ந்தேதி) தொடங்கியது.
விழாவிற்கு வந்த அனைவரையும்
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயலாளர் யசோதா தேவி வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் சேர்பேர்ஷன் நந்தினி ரங்கசாமி,சிறுதுளி அமைப்பு நிறுவனர் வனிதா மோகன் ஆகியோர் கலந்து கொண்டு மரம் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்கள்.
கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் நிறுவனர் தெய்வத்திரு சந்திரகாந்தி அம்மாவின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு மாணவியர்களும் பேராசிரியர்களும் சிறுதுளி அமைப்புடன் இணைந்து பிஎம் ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா வளாகத்தில் 2200 மரக்கன்றுகளை நட்டு வைத்து அது மரமாகும் வரை மூன்று வருடத்திற்குப் பராமரிக்கும் ஒரு உன்னதமான சமூக சேவையோடு சுற்றுப்புற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்காகச் சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தி மரக்கன்றுகளை முறையாகப் பராமரிக்க உள்ளனர். இதற்குரிய செலவினை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் மாணவியர்களும் நன்கொடையாக வழங்கி உள்ளனர்.
இத்திட்டத்தைச் செயல்படுத்துவதன் நோக்கம் இன்றைய தலைமுறையினர் மட்டுமல்ல வரும் தலைமுறையினரும் மகிழ்வோடும் நலத்தோடும் வாழ வேண்டும் என்பதே ஆகும்.மேலும் உலக வெப்பமயமாதலைக் குறைப்பதற்கு ஒரே வழி நகரத்தில் வனங்களை உருவாக்குவதே ஆகும். இதனால் பிற பள்ளி, கல்லூரி நிறுவனங்களும் சிறுதுளி அமைப்புடன் இணைந்து இது போன்று மரக்கன்றுகளை நட்டு முறையாகப் பராமரிக்க முன்வருவார்கள்.அது மட்டுமல்ல நாம் வசிக்கின்ற சுற்றுப்புற சூழலானது பசுமை சூழலோடு அமையும்.
இவ்வாறு மரக்கன்றுகளை நட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்து வளமான உலகைப் படைக்க ஒரு முன்மாதிரியாக பூசாகோஅர கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி யானது இந்த நகரத்திற்குள் வனம்என்ற திட்டத்தை சிறுதுளி அமைப்புடன் இணைந்து செயல்படுத்தி உள்ளது.