November 5, 2024 தண்டோரா குழு
கோயம்புத்தூர் – ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச அளவிலான புகழ்பெற்ற கல்லூரி ஹேக்கத்தானான ஹார்வர்டு 2024-இல், கோயம்புத்தூரில் உள்ள அம்ருதா விஸ்வ வித்யாபீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆல்-ட்ராக் கிராண்ட் பரிசைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
ஸ்டான்போர்ட், எம் ஐ டி, ஹார்வர்ட் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் பங்கேற்ற இப்போட்டியில்,அம்ருதாவின் அணி “ஓவரால் பெஸ்ட் ஹேக்” விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற குழுவில்,அம்ருதா விஸ்வ வித்யாபீடம் கோயம்புத்தூர் வளாகத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு, பி.டெக் செயற்கை நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அம்ருத் சுப்ரமணியன், கோட்டாக்கி ஸ்ரீகர் வம்சி, சுக்கா நவநீத் கிருஷ்ணா மற்றும் சூர்யா சந்தோஷ் குமார் ஆகியோர் அடங்குவர். அவர்களால் வடிவமைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் “Sustainify”, கழிவு மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு செயலிக்காக பாராட்டப்பட்டனர் .
” ஹார்வர்டு- இல் புகழ்பெற்ற பேராசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுனர்கள் இணையான அமர்வுகளுக்கு தலைமை தாங்கினர். CS-50 -இலிருந்து பேராசிரியர் டேவிட் மலன் மற்றும் ட்யூரிங் ஆகியோரின் அமர்வுகளில் நாங்கள் கலந்துகொண்டோம். எங்கள் குழு முதல் 10 மணிநேரத்தில் சரியான யோசனையை கண்டறிய அர்ப்பணித்தது. ஸ்மார்ட் சிட்டி, நிலைத்தன்மை, ஓப்பன் சோர்ஸ் டேட்டா மற்றும் ஹெல்த்கேர் ஆகிய பயன்பாட்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மைக்ரோசாப்ட் மற்றும் பல்வேறு ஸ்டார்ட் அப்களின் தயாரிப்பு மேலாளர்கள் மற்றும் CEO-க்கள் உட்பட 40-க்கும் மேற்பட்ட நடுவர்களால் இறுதி மதிப்பீடுகள் நடத்தப்பட்டன” என்று அம்ருதாவைக் சேர்ந்த, சி. அம்ருத் சுப்ரமணியன் கூறினார்.
பாட்டில்கள் அல்லது சோடா கேன்கள் போன்ற கழிவுப் பொருட்களின் படங்களைப் பதிவேற்ற பயனர்களுக்கு Sustainify உதவுகிறது, மேலும் ஆக்கப்பூர்வமான DIY upcycling யோசனைகளையும் பரிந்துரைக்கிறது. கூடுதலாக, பயன்பாட்டில் சூழல்-ஷாப்பிங் உதவியாளர் அம்சம் உள்ளது. இது கடைகளில் உள்ள தயாரிப்புகளை ஸ்கேன் செய்வது மட்டுமல்லாது குறைந்த கார்பன் தடம் உள்ள பொருட்களுக்கான பரிந்துரைகளை வழங்குகிறது. மக்களுக்கு பயனளிக்கும், நிலையான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதை இந்த செயலி முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இந்த ஆண்டு, இப்போட்டியில் ஸ்டான்போர்ட், எம் ஐ டி, ஹார்வர்ட் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகம் மாணவர்கள் உட்பட, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 600 கல்லூரி மாணவர்களை பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இது 36 மணி நேரம் நடந்த இப்போட்டியில் நான்கு முக்கிய அளவுகோல்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர். புதுமை,தொழில்நுட்பம், செயல்பாடு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை எங்கள் மாணவர்களின் திட்டமான, ‘Sustainify,’-யினை சிறந்ததாக்கியது.
இப்போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தை எம் ஐ டி பெற்றுள்ளது.இந்தியா முதல் முறையாக ஹாக்கத்தானில்”ஓவரால் பெஸ்ட் ஹேக்” விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது” என்று கோயம்புத்தூர் அம்ருதா ஸ்கூல் ஆஃப் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் டீன் பேராசிரியர் டாக்டர் சோமன் கே. பி கூறினார்.
கோயம்புத்தூரில் உள்ள அம்ருதாவின் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியைச் சேர்ந்த டாக்டர் பி.பிரேம்ராஜ் மற்றும் சாய் சுந்தரகிருஷ்ணா ஆகியோர் இந்த குழுவிற்கு வழிகாட்டியாக இருந்தனர். உலகெங்கிலும் உள்ள மாணவர்களை ஈர்க்கும் வருடாந்திர ஹேக்கத்தானாக ஹார்வர்டு விளங்குகிறது. உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு இந்த ஒத்துழைப்பு ஊக்குவிக்கிறது.ஹார்வர்ட் வளாகத்தில் அக்டோபர் 11-13 வரை நடைபெற்ற இந்த ஆண்டு இந்நிகழ்வு,”ஹேக் 4 இம்பாக்ட்” என்ற கருப்பொருளில் முக்கிய கவனம் செலுத்தியது.
இந்நிகழ்வில் 22 நாடுகள் மற்றும் 284 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சுமார் 1,000 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.