• Download mobile app
22 Nov 2024, FridayEdition - 3208
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்ட்டின் குழுமம் சார்பில் ரூ.7 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்ற கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

November 11, 2024 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு மார்ட்டின் குழுமம் 7 கோடி ரூபாய் நிதி வழங்கி டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி,புதிய கட்டிடங்களை கட்டிக் கொடுத்துள்ளது.இங்கு 413 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்ற இந்தப் பள்ளியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆணையாளர் .மேயர் ஆசிரியர்கள்குழந்தைகள் பங்கேற்போடு வெகு சிறப்பாக பள்ளி தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின், நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், செயல் இயக்குனர் டைசன் மார்ட்டின், அரசு அதிகாரிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மார்ட்டின் குழுமத்தின் தலைமைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

கவுண்டம்பாளையத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், அனைத்து கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு, நவீன முறையில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலிருந்து வகுப்பறைகள் வரை, பள்ளி வளாகத்தின் ஒவ்வொரு இடமும் மேம்படுத்தப்பட்டு, மாணவர்களுக்கு படைப்பாற்றல், புதுமை மற்றும் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் சூழலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.

இங்கு டிஜிட்டல் கற்றல் கருவிகளுடன் கூடிய மாணவர்கள் வசதியாக அமர்ந்து படிப்பதற்கான நவீன வகுப்பறைகள்; மாணவர்களின் திறமையை வளர்க்கும் விதமாக நவீன அறிவியல் மற்றும் கணினி ஆய்வகங்கள் ஏராளமான புத்தகங்களுடன் கூடிய அதிநவீன டிஜிட்டல் நூலகம்; 3 ஆயிரம் சதுர அடி பரப்பிலான விளையாட்டு மைதானம்; மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் கலை பண்பாட்டு இடங்கள்; இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பூர்வீக தாவரங்களுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் பகுதி; அனைத்து வசதிகளுடன் கூடிய சாப்பாட்டு அறை; சிறுவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கென தனித்தனியான சுகாதாரமான கழிவறைகள், மாணவர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 24 மணி நேர பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் விளக்குகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இப்பள்ளிக்கு மார்ட்டின் குழுமம் 7 கோடி ரூபாய் செலவில் செய்து கொடுத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் மார்ட்டின் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். மாட்டின் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லீமா ரோஸ் மார்ட்டின் பேசுகையில்,

பொருளாதார ரீதியாக பின் தங்கிய குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்பதே எங்கள் குழுமத் தலைவரின் உயரிய எண்ணமாகும். இந்த முயற்சியானது எங்கள் பள்ளி தத்தெடுப்பு திட்டத்தின் முதல் தொடக்கமாகும்.

ஒவ்வொரு குழந்தையும் உலகத் தரம் வாய்ந்த கல்விக்கு தகுதியானவர்கள். மேலும் அரசுப் பள்ளிகளை நவீன கற்றல் மையங்களாக நாங்கள் மாற்ற இருக்கிறோம். பள்ளிகளின் உள்கட்டமைப்பில் மட்டுமல்ல, மாணவர்கள் இடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த உள்ளோம் என்றார்.
பின்தங்கிய பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வி மற்றும் கற்றல் சூழலை வழங்குவதன் மூலம் அவர்களின் முழு திறனை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் இக்குழுமம் உறுதியுடன் உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்தரக் கல்வியை வழங்குவதையும் அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வதையும் மார்ட்டின் குழுமத்தின் பள்ளி தத்தெடுப்புத் திட்டம் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க