• Download mobile app
15 Nov 2024, FridayEdition - 3201
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரூர் பகுதியில் போதைய ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல்

November 14, 2024 தண்டோரா குழு

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K. கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று (14.11.2024) ஆலாந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதையை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் மேற்பார்வையில் பேரூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கவியரசு ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் ஆலாந்துறை காவல் நிலைய இக்கரைபோளுவாம்பட்டி பகுதிக்கு சென்று அப்பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை கைது செய்து சுமார் 1 7/4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து பின்பு அவர்கள் அளித்த தகவலின் பெயரில் தொண்டாமுத்தூர் தீனம்பாளையம் சென்று சோதனை மேற்கொண்ட போது போதையை ஏற்படுத்தக்கூடிய காளான், கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கோவை P.N.புதூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் மகன் அமரன் (30), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பழனி மகன்’ ஜொனாதன் சதீஷ் (31) ,ஆலாந்துறை பகுதியை சேர்ந்த சின்னசாமி மகன் பிரசாந்த் (30),காளிமுத்து மகன் சரவணகுமார் (26) மற்றும் கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த ஹரி மகன் நிஷாந்த் (23) ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் ரூபாய் 12,90,000 / – மதிப்புள்ள போதையை ஏற்படுத்தக்கூடிய காளான் 589 கிராம் “. ” ரூபாய் 40,000 / – மதிப்புள்ள சுமார் 1 கிலோ கஞ்சா ,சுமார் 13 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள்,இரண்டு சக்கர வாகனம் -4 , செல்போன் -6 லேப்டாப் -2 மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் -1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர் .

இது போன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ , ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

மேற்படி குற்ற சம்பவத்தை விரைந்து பிடித்து நடவடிக்கை எடுத்த தனிப்படையைச் சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர் சிவகுமார் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் திரு.குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கவியரசு மற்றும் காவலர்கள் காளீஸ்வரன், சரவணன், அறிவுநிதி, அறிவுநிதி, அருண்குமார், காதர் ஷெரீப், சுரேஷ் ஆகியோருக்கு வெகுமதி கொடுத்து பாராட்டினார்.

இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.

மேலும் படிக்க