November 21, 2024 தண்டோரா குழு
கோயம்புத்தூரில் அமைந்துள்ள தி கேம்போர்ட் இன்டர்நேஷனல் ஸ்கூல் தனது மூத்த மாணவர்களுக்காக இரண்டாவது தொடர் ‘இக்னைட் யங் மைண்ட்ஸ்’ தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்ச்சியை 2024 நவம்பர் 19 அன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்பைம் இன்கார்பரேட்டட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல்தலைவர்சங்கர் நாராயணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பள்ளியின் நிறுவனர்-தலைவர் என்.அருள் ரமேஷ், நிர்வாகி மMrs. பூங்கொதை அருள் ரமேஷ், மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சயால் சிறப்பு விருந்தினரை வரவேற்று நிகழ்ச்சியை முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாணவர்கள் தொழில்நுட்ப துறையில் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் விதமான தகவல்களைக் கேட்டறிந்தனர்.சங்கர் நாராயணன் அவர்கள், உலகின் முதல் ஹைப்ரிட் ஜிபிஎஸ் அமைப்பை உருவாக்கிய அனுபவத்தை பகிர்ந்து, தொழில்நுட்ப வளர்ச்சியில் நவீன கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தைக் கூறினார்.
மாணவர்கள் இந்த சந்திப்பின் மூலம் தொழில்நுட்ப சாதனங்களை வியாபகமாக மாற்றுவது எப்படி என்பதை அறிந்து, ஒரு நிலையான தொழில்முனைவோர் ஆகாமல் தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளை செய்யும் மனோபாவத்தை உருவாக்க வேண்டும் என்ற ஊக்கத்தைப் பெற்றனர். சமூகத்திற்கு பங்களிப்பை முக்கியமாகக் கருத வேண்டும் என்பதையும் சங்கர் நாராயணன் வலியுறுத்தினார்.
மாணவர்களிடையே இந்த நிகழ்ச்சி பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.