• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நிவாரணம் பெற்று தந்த தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர்

November 22, 2024 தண்டோரா குழு

கடந்த நவம்பர் 7ஆம் தேதி கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண் 68 சிவானந்தா காலனி காந்தி நகர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்கிற பெண்ணின் தலையில் தெருவிளக்கு கம்பம் தலையில் விழுந்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் தலையில் 11 தையல்களோடு வீடு திரும்பியிருந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் குருஸ் முத்து பிரின்ஸ் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சௌந்தரபாண்டியன் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறியதோடு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணத் தொகை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து இருந்தனர்.

பின்னர் இது குறித்து கோவை மாவட்ட துணை மேயர் வெற்றி செல்வன் அவர்களை நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியினர் புகார் மனு அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் இன்று பாதிக்கப்பட்ட பெண் பூர்ணிமா அவர்களுக்கு தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் முன்னிலையில் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பூர்ணிமா கூறுகையில்,

இன்று தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் முத்து பிரின்ஸ் பெரும் முயற்சியால் நிவாரணத் தொகை கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் மேலும் எங்கள் பகுதியில் குப்பை மழையனக் குவிந்து இருப்பதாகவும் அதனை சுத்தம் செய்து தரக்கோரியும் மாநகராட்சி பொதுக் கழிப்பிடம் எங்கள் பகுதியில் மிகுந்த அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் இந்த இரு பிரச்சனையையும் சரி செய்து தர வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சியின் கோவை மத்திய மாவட்ட தலைவர் குருஸ் முத்து பிரின்ஸ் கூறுகையில்,

இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு உரிய நிவாரணத் தொகை பெற்றுத்தர முழு உதவியாக இருந்த கோயம்புத்தூர் துணை மேயர் வெற்றிச்செல்வன் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார் மேலும். கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண் 68 சிவானந்தா காலனி காந்தி நகர் பகுதியில் பொதுக்களிப்பிடம் மிக அபாயகரமான நிலையில் இருப்பதாகவும் அதே பகுதியில் குப்பை மலை என குவிந்து அப்பகுதி மிகுந்த சுகாதாரக் கேடாக இருக்கிற நிலையில் இதனை சரி செய்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சௌந்தரபாண்டியன் மற்றும் இரு கட்சியினர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க