December 2, 2024 தண்டோரா குழு
கோவை மாவட்டம், பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கில் தொடர்புடைய கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பாபு மகன் சிராவன் (33) என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் மேற்படி நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்டக் காவல்கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.
அப்பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி,மேற்கண்ட நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். மேற்படி உத்தரவின்படி எரிசாராயம் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த வழக்கு குற்றவாளியான சிராவன் (33) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 66 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இதில் மதுவிலக்கு குற்றவாளிகளான (Bootleggers)20 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.