December 3, 2024 தண்டோரா குழு
பி.என்.ஐ இன்டர்நேஷனல் ஆர்கனிஷேசன் உலகளாவிய அளவில் செயல்பட்டு வருகிறது.தொழில் முனைவோர்களை ஒன்றிணைப்பதே இதன் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தொழில்கள் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பி.என்.ஐ. க்யூ சர்க்கிள் சார்பில் கோவை அவிநாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரீஜென்ட் ஹோட்டலில் வணிக விளக்கக் காட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது கோவை மாவட்ட பி என் ஐ கியூ சர்க்கில் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
காவேரி குரூப் ஆப் கம்பெனி ஜே. எம்.டி மற்றும் பி.என்.ஐ க்யூ சர்க்கில் முன்னாள் தலைவருமான வினோத் சிங் ரத்தோர் கோவை மாவட்டம் பி.என்.ஐ. க்யூ சர்க்கில் சார்பில் புதிதாக தொழில் தொடங்குவோர், தொழில் முன்னேற்றம் மற்றும் தொழில் அனுபவங்கள் குறித்த “வணிக விளக்கக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
பி.என்.ஐ இன்டர்நேஷனல் உலகம் தரம் வாய்ந்த அமைப்பாக உள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் கடந்த 2021 அக்டோபர் முதல் மார்ச் 2022ஆம் ஆண்டு வரை ஆறு மாத காலமாக பி.என்.ஐ கியூ சர்க்கிள் தலைவராக பணி புரிந்துள்ளேன். இதில் அனைவரும் குடும்ப உறுப்பினராக செயல்பட்டு தொழில் வளர்ச்சியில் ஒன்று பட்டுள்ளோம். பி.என்.ஐ கோவை மாவட்டத்தில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கோவையில் தொழில் வளர்ச்சிக்கு பிஎன்ஐ ஒரு உந்து கோலாக உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிலதிபர்களும் இந்த நெட்வொர்க் மூலம் ஒன்றிணைந்துள்ளனர்.
நாம் வாழும் இந்த உலகில் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டும் குறிப்பாக கலாச்சாரத்தை பின்பற்றுவது நமது அடையாளமாக கொண்டு செயல்பட வேண்டும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் நாம் உற்பத்தி செய்யும் பொருட்களில் தரத்தை என்றும் வாடிக்கையாளர்களின் நிறைவு பெற்றிருக்க வேண்டும் எனவும் நாம் வாழும் இந்த மண்ணிற்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த மண்ணை பசுமை நகரமாக மாற்றும் முயற்சியில் அனைவரும் ஈடுபாடு வேண்டும் என்று தெரிவித்தார்.