• Download mobile app
27 Dec 2024, FridayEdition - 3243
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக அதிக எண்ணிக்கையில் மாணவர்களை அனுப்பும் முக்கிய நகரங்களுள் ஒன்றாக கோயம்புத்தூர்

December 11, 2024 தண்டோரா குழு

வெளிநாட்டில் கல்விக்கான சேவையை வழங்கும் தெற்காசியாவின் மிகப்பெரிய செயல்தளமான லீப்ஸ்காலர், அதன் “செயலி அடிப்படையிலான சர்வே 2024” – ஐ வெளியிட்டிருக்கிறது. இன்டர்நேஷனல், ICSE மற்றும் CBSE போர்டுகளில் பயிலும் மாணவர்களைப் போலவே, மாநில கல்வித் துறை நடத்தும் ஸ்டேட் போர்டு வழிமுறை பள்ளியில் பயிலும் மாணவர்களும் சமஅளவில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை இந்த சர்வே வெளிப்படுத்தியிருக்கிறது.

வெளிநாட்டில் கல்வி பயில ஆர்வமுள்ள இந்த மாணவர்கள் குழுவில் பங்களிப்பை வழங்கும் முன்னணி நகரங்களுள் ஒன்றாக கோயம்புத்தூர் உருவெடுத்திருக்கிறது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களை அனுப்பும் பிற முன்னணி நகரங்களுள் சென்னை, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத், புனே, விசாகப்பட்டினம் மற்றும் லக்னோ ஆகியவை சிலவாகும்.

இன்டர்நேஷனல் / ICSE மற்றும் CBSE போர்டுகளைச் சேர்ந்த மாணவர்களே வெளிநாட்டில் உயர்கல்விக்கான தகவலறிவையும், விருப்பத்தையும் கொண்டிருக்கின்றனர் என்ற பொதுவான நம்பிக்கையை இந்த சர்வே கண்டறிதல் முடிவுகள் சிதைத்திருக்கின்றன. ஸ்டேட் போர்டு வழிமுறையில் பயிலும் மாணவர்கள் உட்பட, பல்வேறு தரப்பினரும் வெளிநாடுகளில் உயர்கல்வி கற்க விரும்புபவர்களாக இருக்கின்றனர் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. இவர்களுள் 34% பெண்கள் என்பது, இப்போக்கில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

“வெளிநாட்டில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து நிலையாக அதிகரித்து வருவதை கோயம்புத்தூர் கண்டிருக்கிறது. வெளிநாடுகளில் கல்வி கற்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாடெங்கிலும் காணப்படும் விரிவான போக்கையே கோயம்புத்தூரும் பிரதிபலிக்கிறது. அரசு தரவின்படி, 2024-ம் ஆண்டில், 13.3 இலட்சம் இந்திய மாணவர்கள், வெளிநாடுகளில் உயர்கல்வி கற்று வருகின்றனர். 2022-ல் இந்த எண்ணிக்கை சுமார் 7.5 இலட்சமாக இருந்தது. இந்த வளர்ச்சி என்ற மாற்றத்தை உருவாக்கும் செயற்பணியில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

சர்வதேச கல்வி நிறுவனங்களில் கற்க வேண்டுமென்ற அவர்களது கனவுகளை நிஜமாக்க மாணவர்களுக்கு திறனதிகாரத்தை ஏதுவாக்குவதில் நாங்கள் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறோம். இதற்கு முன்பு ஒருபோதும் இருந்திடாத அளவிற்கு சர்வதேச கல்வியை அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் இப்போது பரிசீலிக்கின்றனர் மற்றும் அவற்றை செயல்படுத்துகின்றனர் என்பதை காண்பது உண்மையிலேயே உத்வேகமளிக்கிறது.” என்று லீப் நிறுவனத்தின் இணை – நிறுவனர் அர்னவ் குமார் கூறினார்.

கூடுதலாக, வெளிநாடுகளில் கல்வி கற்கும் புதிய அமைவிடங்களும் மற்றும் புதிய கல்வி பாடத்திட்டங்களும் உருவாகி வருவதையும் மாணவர்கள் மத்தியில் இதற்கு ஆதரவு பெருகி வருவதையும் இந்த சர்வே வெளிப்படுத்தியிருக்கிறது.கனடா, யுகே, யுஎஸ் ஆகியவை முதன்மை தேர்வுகளாக தொடர்ந்து இருக்கின்ற போதிலும், இந்த நாடுகள் அல்லாத பிற நாடுகளிலும் கல்வி கற்க இந்திய மாணவர்கள் விருப்பம் காட்டுவது அதிகரித்து வருகிறது. ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் புதிய அமைவிடங்களாக ஜப்பான் மற்றும் நெதர்லாந்து உருவெடுத்து வருகின்றன.

மேலும் படிக்க