January 8, 2025 தண்டோரா குழு
பெரியநாயக்கன் பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன்,மாவட்டத்தில் குற்றங்களை கண்காணித்து தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறையினருக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியும், சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும் வருகிறார்.
இந்நிலையில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டதில் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரிய நாயக்கன்பாளையம் காவல் நிலைய காவல்துறையினர் ஜோதிபுரம் அருகே சென்ற சோதனை மேற்கொண்ட போது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனைக்கு வைத்திருந்த ஜோதிபுரம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி மகன் சக்திகுமார் (32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 600 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்து, மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.