சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று (12.01.2025) கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் கணியூர் பெருமாள் கோவில் அருகே சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் மகன் சுரிளி @சுரேந்திரன் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.மேலும் மேற்படி நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
தமிழகம் முழுவதும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி!
சூலூர் பகுதியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர்
சத்குரு குருகுல மாணவர்கள் ஓதுவார்கள் போல் தேவாரம் பாடும் வல்லமை பெற்றவர்கள் – பேரூர் ஆதீனம் பாராட்டு
நிலையான கட்டமைப்பிற்கான மாடலிங் மற்றும் பகுப்பாய்வு முன்னேற்றங்கள் குறித்த சர்வதேச மாநாடு
ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா!களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்
பூமித்தாய் போல் நீங்களும் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள் – சத்குருவின் பொங்கல் வாழ்த்து