• Download mobile app
14 Jan 2025, TuesdayEdition - 3261
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பூமித்தாய் போல் நீங்களும் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வையுங்கள் – சத்குருவின் பொங்கல் வாழ்த்து

January 13, 2025 தண்டோரா குழு

பொங்கல் அல்லது சங்கராந்தி என்பது பூமித்தாய் வசந்த காலத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடி. நீங்களும் உங்களுக்குள் வசந்தத்தின் புத்துணர்வை நோக்கி அடியெடுத்து வைக்க வாழ்த்துக்கள் என பொங்கல் தின வாழ்த்து செய்தியில் சத்குரு கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில்,

“நம் கலாச்சாரத்தில் பொங்கல் விழா நம் கலாச்சாரத்தில் மிக மிக முக்கியமான விழா. எதற்கு என்றால் நம் உணவை உருவாக்குகின்ற செயலில் பல விலங்குகளுக்கு மிகவும் ஆழமான ஈடுபாடு இருக்கிறது. இப்போது நாம் விவசாயம் என்றால் டிராக்டரை காட்டுகிறார்கள். உணவினை டிராக்டரால் வளர்க்க முடியாது, அதன் மூலம் நிலத்தை உழ முடியும்.

நம்முடைய நிலம், நம்முடைய மண் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால், அதில் சத்தான உணவு வளர வேண்டுமென்றால் இந்த ஆடு மாடுகள் மற்றும் பல விதமான விலங்குகளுடன் ஒரு ஆழமான தொடர்பு இருக்கிறது.

அதனால் இந்த விழா நம்மை பற்றியது அல்ல, அந்த விலங்குகள் பற்றியது, அவர்கள் இல்லாமல் நாம் வாழ முடியாது என்று நமக்குத் தெரியும். நாம் இல்லாமல் அவர்கள் நன்றாக வாழ்வார்கள். அதனால் அவர்களுக்கு நம் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. எனக் கூறியுள்ளார்.

https://x.com/SadhguruTamil/status/1878781544283988238

போகி குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் காணொளியில் “நம் வாழ்க்கையில் பழையது அனைத்தையும் நாம் அவ்வப்போது எரிக்கவில்லை என்றால் நம் வாழ்க்கையே பெரிய சுமையாகி விடும்.

போகிப் பண்டிகை என்பது வெறும் துணிமணி எரிப்பது மட்டும் இல்லை. நம் ஒரு வருட வாழ்க்கையில் வீட்டுக்குள்ளேயே மனஸ்தாபங்கள், சண்டைகள், விவாதங்கள் வரும் வெளியிலிருந்து கூட நிறைய வரும். இந்த நேரத்தில் பழையது எல்லாம் சேர்த்து எரித்து அனைத்தையும் புதியதாக ஆரம்பிக்கலாம் என்பதே இதன் முக்கியமான நோக்கம். இந்த ஒரு நோக்கம் நமக்கு இல்லை என்றால், சின்ன சின்ன விஷயங்கள் நம் வாழ்க்கை முழுக்க நம்மோடு வரும். இது நம் பழைய கர்மா அனைத்தையும் எரிப்பது போன்ற ஒரு வாய்ப்பு.

அந்த நாளில் அனைத்தையும் சேர்த்து எரித்து விட்டீர்கள் என்றால் பழையது முடிந்தது. இப்போது புது வாழக்கையை, செயலை உற்சாகமாக புது ஆரம்பத்தோடு துவங்குவது நல்ல நோக்கம் தான்.” எனக் கூறியுள்ளார்.

https://x.com/SadhguruTamil/status/1878454236952043715

மேலும் படிக்க