• Download mobile app
20 Jan 2025, MondayEdition - 3267
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சீனியர் மாஸ்டர்களுகான கராத்தே போட்டியில் தங்கம் வென்று அசத்திய திருப்பூர் கராத்தே பயிற்சியாளர் கியோஷி என் சக்திவேல்!

January 20, 2025

உலக அளவில் பிரபலமான பல்வேறு தற்காப்பு கலைகளில் கராத்தேவும் ஒன்று. இந்த தற்காப்பு கலை மீது சிறுவயதில் இருந்தே கொண்ட பற்றினால் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கியோஷி என்.சக்திவேல் மிக ஆர்வத்துடன் கராத்தே கற்க ஆரம்பித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும்
கராத்தே பயிற்சி பெற்றும் சீனியர் பயிற்சியாளராகவும் திகழ்ந்து வருகிறார். இதில் அவர் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.

கடந்த 1986-ம் ஆண்டு முதல் கராத்தே போட்டிகளில் பங்கேற்று வரும் கியோஷி என்.சக்திவேல் 1990-ம் ஆண்டு முதல் முறையாக மலேசியா மாஸ்டரிடம் பிளாக் பெல்ட் பெற்றார்.2022 -ல் ஷோபுகாய் ஷிடோ ரியு அமைப்பின் தலைவர் ஹன் சிஅல்தப் ஆலமிடம் 7 -ம் டான் பட்டத்தை பெற்றார்.2015 -ம் ஆண்டு புதுடெல்லியில் ஏசியன் கராத்தே பெடரேஷன் நடத்திய தேர்வு மூலம் ஆசியன் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020-2021 -ம் ஆண்டு ஆன்லைன் மூலமாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஜப்பான் போன்ற நாடுகள் நடத்திய மாஸ்டர் கட்டா இன்டர்நேஷனல் போட்டிகளிலும், கேரளா, ஆந்திரா என இந்தியாவில் நடந்த போட்டிகளில் மொத்தம் 4 தங்கம், 4 வெள்ளி,2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார்.

தற்போது திருப்பூர் மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேஷனில் பொது செயலாளராக உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேஷன் சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 42வது மாநில அளவிலான சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக நடைபெற்ற 55வயதிற்கு மேற்பட்ட மாஸ்டர்களுக்கான மாநில அளவிலான கட்டா பிரிவில் கியோஷி என்.சக்திவேல் 7TH DAN BLACK BELT(JAPAN) தங்க பதக்கமும்,KUMITE பிரிவில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.இப்போட்டியில் 2 பிரிவுகளிலும் தங்கம்,வெள்ளி என 2 பதக்கம் பெற்ற மாஸ்டர் இவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1992,1993 ல் ஆல் இந்தியா
அளவிலான கராத்தே போட்டியில் KATA, TEAM KATA ,KUMITE ,TEAM KUMITE என நான்கு பிரிவிலும் 4 தங்க பதக்கம் தொடர்ந்து 2 ஆண்டுகள் பெற்று சாதனை செய்துள்ளார்.மேலும் எண்ணற்ற போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி திருப்பூர் காவல் துறையினருக்கு கராத்தே பயிற்சி அளித்துள்ளார்.மேலும் திருப்பூரில்
இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.இதற்காக இவருக்கு கடந்த 2022ல் திருப்பூர் மாவட்ட கராத்தே சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் மேயர் முன்னிலையில் Pride of Tirupur Best Coach என்று விருது வழங்கப்பட்டது.

இவர் பெரியாண்டிபாளையம் மங்கலம் ரோட்டில் உள்ள பாரடைஸ் காம்ப்ளக்சில் தற்போது பயிற்சி அளித்து வருகிறார். மேலும், இவரிடம் பயிற்சி பெற்று பல்வேறு விருதுகள் பெற்ற பெண் பயிற்சியாளர் அ.கலையரசி 2 nd DAN Black belt என்பவர் பெண்களுக்கான இலவச சிறப்பு தற்காப்பு பயிற்சி அளித்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்தும் வருகிறார்.இவரை 9942324411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க