• Download mobile app
01 Feb 2025, SaturdayEdition - 3279
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45வது ஆண்டு விழா – அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்பு

January 31, 2025 தண்டோரா குழு

இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 45வது ஆண்டு விழாவில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர். வி. செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கோவை கரும்புக்கடைப் பகுதியில் 45 ஆண்டுகளாக சிறுபான்மையின மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபடும் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா 29 ஜனவரி 2025 புதன்கிழமை மாலை 5 மணிக்கு இறைவசனங்களுடன் துவங்கியது.

ஆரம்பமாக இஸ்லாமியா பள்ளியின் தாளாளர்.அப்துல் ஹக்கீம் தலைமையுரை ஆற்றினார்.பள்ளி முதல்வர் சசிகலா ராணி பள்ளியின் கடந்த வருட சாதனைகளை விளக்கிக் கூறினார்.

இந்நிகழ்வில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் 45ஆவது ஆண்டு விழாவை துவக்கி வைத்து ஆண்டுமலரையும் வெளியிட்டார். அதனைதொடர்ந்து, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கினார்.

மேலும், கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியின் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கி, அமைச்சர் பேசுகையில் சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சியில் இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பணிகளை வெகுவாக பாராட்டினார்.

மேலும் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றதிற்காக அரசு பாடுபட்டு வருவதாகவும், இஸ்லாமியா கல்வி அறக்கட்டளையின் கல்வி சேவைக்கு அமைச்சர் என்ற ரீதியில் எனது முழு ஒத்துழைப்பும், ஆதரவும் இருக்கும் என உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய இஸ்லாமியா கல்வி அறக்கட்டளையின் தலைவர் முஹம்மத் ஹனீஃபா மன்பஈ அவர்கள் முஸ்லிம்கள் அராய்ச்சி மற்றும் உயர்கல்வியில் மேலும் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில், இஸ்லாமியா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், ஆசிரிய பெருமக்கள், பெற்றோர் – ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பண்பியல்துறை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், என ஐந்தாயிரத்திற்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க