February 8, 2025
தண்டோரா குழு
கோவை அவிநாசி ரோடு, கேஎம்சிஹெச் மருத்துவமனையில் பெண்களுக்கென்ற ஒரு சிறப்பு புற்றுநோய் தடுப்பு முகாம் ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது.
இந்த முகாமில் பெண்களுக்கான கருப்பை கட்டி (Fibroid Embolization) மற்றும் கர்ப்பப்பை வாய் (Cervical Cancer) புற்றுநோய் பரிசோதனைகள் பிப்ரவரி 1 முதல் மார்ச் 1 வரை நடத்துகிறது. பெண்களுக்காக சிறப்பு சலுகையாக இலவச ஆலோசனை & சலுகைக் கட்டணத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, பெண்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி உங்கள் உடல் ஆரோக்கியத்தை காத்திடுவீர்.
கர்ப்பப்பை கட்டி )Fibroid) என்பது, பெண்களுக்கு சாதாரணமாக காணப்படும் ஒரு ஆபத்து இல்லாத கட்டி.இது சாதாதரண கட்டிதானே என அலட்சிப்படுத்தினால், கர்பப்பபையைக் கூட அகற்றப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.அதிநவீன பைப்ராய்டு எம்போலைசேஷன் (Fibroid Embolization)என்ற சிகிச்சை முறையின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் கர்ப்பப்பை பாதுகாத்திடும் வாய்ப்பும் உள்ளது.
மாதவிடாய் காலங்களில் அதிக வலி, அதிக அளவில் உதிரப்போக்கு,அடிக்கடி சிறுநீர் கழித்தல், மலம் கழிப்பதில் சிரமம், அடிவயிற்றில் உப்புசம் முதலானவை கர்ப்பப்பை கட்டி இருப்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது இந்தியப் பெண்களிடையே காணப்படும் புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ‘ஹூயூமன் பாப்பிலோமா வைரஸ்(எச்.பி.வி. / HPV) என்ற வைரஸ் மூலம் ஏற்படுகிறது. சுமார் 80 – 90 சதவீதம் பெண்களுக்கு எச்.பி.வி./ HPV தொற்று ஏற்படலாம். 10-15 சதவீதம் பெண்களுக்கு இது புற்றுநோயாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. இவ்வைரஸ் தொற்றுக்கு எந்த அறிகுறியும் கிடையாது. குறிப்பிட்ட காலத்தில், பரிசோதனை மட்டும்தான் இத்தொற்றை கண்டறிய உதவும். பரிசோதனைகள் மற்றும் தகுந்த சிகிச்சை மூலம் வைரஸ் தொற்றை குணப்படுத்தி புற்றுநோயை தடுக்கலாம்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயினை கண்டறிய இருவகையான பரிசோதனை முறைகள் உள்ளன. முதலாவது, வழக்கமாக செய்யப்படும் பேப் ஸ்மியர் (Pap smear) பரிசோதனை மற்றும் அதிநவீன எச்.பி.வி., பரிசோதனை. HPV தடுப்பூசி போட்டுக் கொள்வது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
கர்ப்பப்பை வாய் பரிசோதனை யார் செய்து கொள்ள வேண்டும்.
25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். அதைத் தவிர ஒழுங்கற்ற அல்லது அதிகமான மாதவிடாய் இரத்தப்போக்கு, மாதவிடாய் நின்ற பிறகு இரத்தப்போக்கு, காரணம் தெரியாத எடை இழப்பு, அடிவயிற்றில் தொடர்ந்து வலி, தாம்பத்ய உறவுக்கு பின் இரத்தப்போக்கு, பிறப்புறுப்பில் துர்நாற்றத்துடன் திரவம் அல்லது வெள்ளைப்படுதல், காரணம் தெரியாத பசியின்மை, மாதவிடாய் காலங்களுக்கு இடையே தொடர்ந்து இரத்தப்போக்கு, மேற்கண்ட ஏதேனும் ஒரு அறிகுறிகள் உள்ளவர்கள் கண்டிப்பாக இம்முகாமில் கலந்துகொண்டு மருத்துவர் ஆலோசனை பெறவேண்டும்.
பெண்களுக்கு இந்த நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கேஎம்சிஹெச் மருத்துவமனை (அவிநாசி ரோடு) கருப்பை கட்டி மற்றும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை முகாம் 1.02.2025 முதல் 1.03.2025 வரை நடத்துகிறது. இந்த முகாமில் மருத்துவ ஆலோசனை இலவசம். பரிசோதனைகள் மற்றும் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளை சலுகை கட்டணத்தில் செய்துகொள்ளலாம். இந்த முகாமில் HPV பரிசோதனை, பேப் ஸ்மியர் பரிசோதனை மற்றும் HPV தடுப்பூசிகளை குறைந்த கட்டணத்தில் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும், பரிசோதனைக்கான முன்பதிவிற்கும் 74188 87411 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.