• Download mobile app
12 Feb 2025, WednesdayEdition - 3290
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா!

February 11, 2025 தண்டோரா குழு

கோவை ஈஷா யோக மையத்திற்கு தைபூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (11/02/2025) முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.

ஈஷாவில் ‘லிங்க பைரவி’ கடந்த 2010-ஆம் ஆண்டு தைபூசத் நாளன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது.ஆகையால் ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா தைப்பூசத் திருநாளில் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் ஈஷா யோக மையத்தில் தைபூசத் திருவிழா மற்றும் லிங்க பைரவி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியினர் மற்றும் வெளிநாட்டினர் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி தேவி திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தி ஊர்வலமாக ஈஷா யோக மையம் வரை பாத யாத்திரையாக வந்தனர்.

ஆலாந்துறைக்கு அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் ஈஷா வரையிலான 15 கி.மீ தொலைவிற்கு லிங்க பைரவி திருவுருவத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் பெரிய அளவிலான முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரையாக வந்தனர்.

இதனுடன் லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள் மேற்கொள்ளும் ‘பைரவி சாதனா’ எனும் ஆன்மீக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சியும், மாலையில் லிங்க பைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தேவி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க