January 27, 2017 தண்டோரா குழு
சர்வதேச எல்லையை தாண்டியதாக 36 இந்திய மீனவர்களையும் அவர்களுடைய 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
இது குறித்து போர்பந்தர் நேஷனல் பிஷ் வோர்கர்ஸ் போரம்(National Fishworkers Forum) செயலாளர், மனிஷ் லோதாரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை(ஜனவரி 27) கூறியதாவது:
“சர்வதேச எல்லையை தாண்டியதாக 36 இந்திய மீனவர்களையும் அவர்களுடைய 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர்.
மற்ற மீனவர்களிடம் இருந்து கிடைத்த தகவலின் படி, ஜக்ஹு கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த 36 மீனவர்களையும் அவர்களுடைய 6 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. அவர்களை கராச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுடன் பல இந்திய மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கலாம் என அஞ்சுகிறேன்.
கராச்சி துறைமுகத்தை அவர்கள் நாளை அடைந்த பிறகு தான் முழு விவரமும் எங்களுக்கு தெரியவரும். இது தொடர்பாக பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சர்வதேச எல்லையை தாண்டி மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர் என்று கூறி இந்திய மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை பாகிஸ்தான் வழக்கமாக கொண்டுள்ளது.
கடந்த மாதம் இந்திய மீனவர்கள் 65 பேரையும், அவர்கள் சென்ற 13 படகுகளையும் பாகிஸ்தான் கடற்படை சிறைப்பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.