• Download mobile app
21 Feb 2025, FridayEdition - 3299
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆதியோகியின் அருளையும் அள்ளித் தரும் சிவாங்கா சாதனா!

February 19, 2025 தண்டோரா குழு

ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு உத்ராயண காலம் என்பது மிகவும் முக்கியமான காலம்.பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம்.

அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.

தக்ஷிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது.உத்தராயணம் ஞானமடைதலுக்கானது.இது உள்வாங்குதலுக்கான காலம்,அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம் இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது.

பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே,இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உத்தராயணத்தின் தொடக்கத்தில், விழிப்புணர்வுடன் அருளை உள்வாங்கும் தன்மையை மக்களிடம் அதிகரிப்பதற்காக ஈஷாவில் குறிப்பிட்ட ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தான் சிவாங்கா சாதனா. சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சாதானாவில் இருப்பவர்கள் 42, 21, 14, 7 ஆகிய கால அளவுள்ள நாட்கள் விரதமிருந்து இதனை மேற்கொள்வார்கள். இந்த சிவாங்கா சாதனாவில் சிவ நமஸ்காரம் எனும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சியும், நெறிபடுத்தப்பட்ட உணவு முறையும், ஆதியோகி சிவன் குறித்த மந்திர உச்சாடனங்களும் அடங்கும். ஆண்கள் மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும் – ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.

சிவாங்கா சாதனாவின் அடுத்த தீட்சை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், [email protected] என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் சிவாங்கா சாதனாவில் பங்கேற்ற தன்னார்வலர்கள் ஆதியோகி ரத யாத்திரையிலும் பங்கேற்று வருகின்றனர். ஆதியோகி ரத யாத்திரையானது தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது பிப்ரவரி 26-ஆம் தேதி மஹா சிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க