• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய வம்சாவளியினருக்கு ஆஸ்திரேலியாவின் மிக உயரிய விருது

January 27, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவின் தேசிய தினம் வியாழக்கிழமைஸ (ஜன 26) கொண்டாடப்பட்டது. இந்நிலையில்
ஆஸ்திரேலியாவின் கவுரம் மிக்க 2017-ம் ஆண்டுக்கான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேருக்கு வழங்கப்பட்டது.

மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக சிட்னியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் புருஷோத்தம் சவரிகர், நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித் துறை மற்றும் மருத்துவம் சார்ந்த பிறதுறைகளில் சிறப்பாக சேவை செய்துள்ளதற்காக மக்கான் சிங், அணு மருத்துவ நிபுணரும், சிட்னிநகர தமிழ்ச் சங்கத் தலைவருமான விஜயகுமார் ஆகிய மூவருக்கும் அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருது அளிக்கப்பட்டது.

விஜயகுமார் கடந்த 2007 மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணுசக்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதினைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் “ஹீரோ ஆஃப் தி இயர்” விருதுக்கு தேஜிந்தர் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் டார்வின் மக்களுக்கு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்கள் மூலம் இலவசமாக உணவு வழங்கி வருகிறார். அதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க