• Download mobile app
03 Apr 2025, ThursdayEdition - 3340
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் முதல் AI தொழில்நுட்பத்துடன் இயங்க கூடிய இன்சிடென்டல் பல்மனரி நோடூல் கிளினிக், தங்கம் புற்றுநோய் மையத்தில் அறிமுகம்

March 25, 2025

இந்தியாவில் இன்று நுரையீரல் புற்றுநோய் மிகவும் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம் மற்றும் மக்கள் நல முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது.

சுகாதாரப் பராமரிப்புக்கான செயற்கை நண்ணறிவு (AI) துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Qure.ai, தமிழ்நாட்டின் நாமக்கல்லில் உள்ள தங்கம் புற்றுநோய் மையத்தில் இந்தியாவின் முதல் AI தொழில்நுட்பத்தில் இன்சிடென்டல் பல்மனரி நோடூல் (IPN) கண்டறிதல் கிளினிக்கை தொடங்கியுள்ளது.

இந்த முன்னெடுப்பு, உலகின் முன்னனி மருத்துவ நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் மெட்டெக்கின் அறுவை சிகிச்சை பிரிவு மற்றும் இந்தியாவில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் AI- மூலம் இயங்கும் Incidental Pulmonary Nodule கிளினிக்குகளை நிறுவ வடிவமைக்கப்பட்ட Qure.ai இடையேயான ஒத்துழைப்பில் உருவான Project BreatheEZ இன் ஒரு பகுதியாகும். இந்த கிளினிக்குகள் ஒருங்கிணைந்த ஸ்கிரீனிங் மையங்களாக செயல்படும். இதன் நோக்கம் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்கு ஆரம்பகால நோய் கண்டறிதல், பரிசோதித்தல் மற்றும் சிகிச்சை பராமரிப்பை மேம்படுத்துவது ஆகும்.

தங்கம் புற்றுநோய் மைய Incidental Pulmonary Nodule கிளினிக் என்பது ஒருங்கிணைந்த ஸ்கிரீனிங் மற்றும் பராமரிப்பு பாதையின் ஒரு பகுதியாக Qure.ai இன் USFDA-ஆல் அங்கீகரிக்கப்பட்ட qXR தீர்வைப் பயன்படுத்தி நுரையீரல் பாதிப்புக்களை முறையாகக் கண்டறிந்து கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரத்யேக இன்சிடுடன்டல் பல்மனரி நோடூல் ( IPN) கிளினிக் ஆகும். மருத்துவமனையில் கட்டமைக்கப்பட்ட, AI-ல் இயக்கப்படும் இந்த ஸ்கிரீனிங் திட்டம், வழக்கமான செஸ்ட் எக்ஸ்-ரேவை கொண்டு 6 மிமீ வரை உள்ள சிறிய பாதிப்புக்களையும் கண்டறிய உதவும். இந்த எளிய பரிசோதனை மற்றும் செலவு குறைந்த அணுகுமுறை, நுரையீரல் புற்று நோய் உள்ளதா என்று தொடக்க நிலையில் கண்டறிந்து, சிகிச்சை மேற்கொண்டால் வாழ்க்கை தரமும், வாழும் நாட்களும் சிறப்பாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் அறுவை சிகிச்சையில் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவண ராஜமாணிக்கம் மூலம் இந்த AI-செயலி அறிமுகமாகியுள்ளது.

இப்புதிய AI-தொழில்நுட்ப அறிமுகம் குறித்து, தங்கம் புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தொராசிக் சர்ஜிக்கல் ஆன்காலஜி இயக்குனர் டாக்டர் சரவண ராஜமாணிக்கம் எம்.எஸ்., எம்.சி.எச். பேசுகையில், “உலகளாவிய சுகாதார தொழில்நுட்பத்தின் சிறந்ததை மக்களுக்குக் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். சமூகத்திற்குப் பெருமளவில் பயனளிக்கும் வகையில், இந்த AI-யில் இயக்கப்படும் கிளினிக் தொடங்கப்பட்டதன் மூலம்,நுரையீரல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திறனை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தியாவில் பல்லாயிர கணக்கானவர்களுக்கான புற்றுநோய் பராமரிப்பை மறுவரையறை செய்கிறோம். ரோபாட்டிக்ஸ் போன்ற மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்களுடன் AI இன் துல்லியத்தை இணைப்பது, ஆரம்பகால நோய் கண்டறிதலிலிருந்து மேம்பட்ட சிகிச்சை வரை, அனைத்தும் ஒரே கூரையின் கீழ் ஒரு விரிவான பாதையை நமக்கு வழங்குகிறது” என்றார்.

மேலும் இந்த தொழில்நுட்பம்,வழக்கமான செஸ்ட் எக்ஸ்-ரே மூலம் நுரையீரல் பாதிப்புக்களை கண்டறிவதோடு மட்டும்மல்லாமல், கதிரியக்கவியலாளர்களுக்கு வீரியம் மிக்க ஆபத்து அளவீடுகளை வழங்குவதன் மூலமும், காலப்போக்கில் பாதிப்புகளின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதன் மூலமும், கதிரியக்கவியல், நுரையீரல் மற்றும் புற்றுநோயியல் துறைகளுக்கு இடையே தடையற்ற பராமரிப்பு ஒருங்கிணைப்பை உறுதி செய்யவும் உதவுகிறது.

Qure.ai இன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனர் பிரசாந்த் வாரியர் கூறுகையில்,

“Qure.ai இல், AI உடனான முக்கியமான சுகாதாரப் பராமரிப்பு இடைவெளிகளைக் குறைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். வழக்கமான செஸ்ட் எக்ஸ்-ரேவை கொண்டு ஆரம்ப நிலை நுரையீரல் புற்றுநோய் எச்சரிக்கை கருவிகளாக மாற்ற தங்கம் புற்றுநோய் மையத்துடனான கூட்டாண்மை எங்கள் AI தீர்வுகளின் திறனுக்கான ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு. இந்தியாவின் சுகாதாரப் கட்டமைப்பில் முழுவதும் இந்த புதிய தொழில் நுட்பத்தை மேலும் பரவலாக்க நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம், என்றார்.

நுரையீரல் புற்றுநோய் உலகின் மிக ஆபத்தான புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது, பெரும்பாலும் தாமதமான நிலை நோயறிதல் காரணமாக, இந்தியாவில் ஆண்டுதோறும் 1,12,000 புதிய நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகின்றன, ஆனால் 4% பாதிப்புகள் மட்டுமே ஆரம்ப நிலையில் கண்டறியப்படுகின்றன. பெரும்பாலான நோயாளிகள் பாதிப்புகள் முற்றி அறிகுறிகள் தோன்றும்போது மட்டுமே கண்டறியப்படுகிறார்கள், அந்த நேரத்தில் சிகிச்சை சாத்தியகூறுகள் குறைவாகவே உள்ளன. இதுவரை இல்லாத, புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட AI-யில் இயங்கும் மருத்துவமனை, தற்போது இந்தியாவிலும் உலகின் பிற பகுதிகளிலும் குறிப்பாக புகைபிடிக்காதவர்களையும் சேர்த்து அதிகரித்து வரும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது.

மேலும் படிக்க