• Download mobile app
19 Apr 2025, SaturdayEdition - 3356
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் மேம்பட்ட வசதிகளுடன் பெரிய, நவீன மருத்துவமனையை திறந்திருக்கும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை

April 8, 2025 தண்டோரா குழு

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற கண் பராமரிப்பு சங்கிலித்தொடர் நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தமிழ்நாடு மாநிலத்தின் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை வழங்க வேண்டுமென்ற அதன் நோக்கம் மற்றும் அர்ப்பணிப்பை மறுஉறுதி செய்யும் வகையில், திருப்பூர் மாநகரில் புதிதாக புதுப்பிக்கப்பட்ட, அதிநவீன மருத்துவமனையை திறந்துள்ளது.

இம்மருத்துவமனை திறக்கப்பட்டதை முன்னிட்டு, 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் மூத்த குடிமக்களுக்கு (50 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு) இலவச கண் மருத்துவ ஆலோசனை சேவைகளை இம்மருத்துவமனை வழங்குகிறது.

திருப்பூர் துணை மேயர், ஆர். சுப்ரமணியம்,கே.எம். நிட்வேர் பிரைவேட் லிமிடெட்-ன் தலைவரும், பழனியிலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின், தலைவரும் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவருமான K.M.சுப்ரமணியம் இம்மருத்துவமனையை திறந்து வைத்தார்.

கிட்ஸ் கிளப் குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ்-ன் தலைவரும் மற்றும் திருப்பூர் தமிழ் சங்கத்தின் செயலாளருமான மோகன் K. கார்த்திக் மற்றும் ரோட்டரி மாவட்டம் 3203 மாவட்ட ஆளுநர் Rtn.AKS B. தனசேகர் ஆகியோர் இத்திறப்பு விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னிலை வகித்தனர்.இந்த திறப்பு விழாவில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை தலைவர் மற்றும் கண்புரை,கண்அழுத்தநோய் மற்றும் விழியில் ஒட்டறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எல். ஸ்ரீனிவாசன், பொது கண் மருத்துவர்களான டாக்டர் கரண்சிங் தன்ராஜ் சவான், டாக்டர் தீபிகா மற்றும் டாக்டர் வி. சி.தினேஷ் குமார், மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் இயக்க செயல்பாடுகளுக்கான துணை தலைவர் நந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை கண்புரை, கண்அழுத்தநோய்,கருவிழிப்படலம், விழித்திரை, ஒளிவிலகல்,சுற்றுப்பாதை மற்றும் விழியில் ஒட்டறுவை சிகிச்சைகள் உட்பட பல்வேறு கண் மருத்துவ சேவைகளை வழங்கும்.இந்த மருத்துவமனை நான்கு தளங்களில் 12,770 சதுர அடி பரப்பளவில் மிகப் பெரிதாக அமைந்துள்ளது.செஞ்சுரியன் பாகோ இயந்திரம், சிரஸ் டோபோகிராஃபி மற்றும் நிடெக் OCT போன்ற அதிநவீன நோயறிதல் உபகரணங்கள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. கண் சிகிச்சையில் திறமையான சிறப்பு நிபுணர்களின் குழு மற்றும் பயிற்சி பெற்ற 20 துணை மருத்துவப் பணியாளர்கள் மூலம் மேற்புற உணர்வுநீக்க மருந்தின் கீழ் MICS கண்புரை அறுவை சிகிச்சைகள், ICL அறுவை சிகிச்சைகள் மற்றும் விழித்திரை லேசர்கள் போன்ற மேம்பட்ட சிகிச்சைகளை இம்மருத்துவமனையால் வழங்க முடியும்.

திருப்பூரில் தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த புதிய மருத்துவமனையானது ஆண்டுதோறும் 35,000 நோயாளிகளுக்கு கண் சிகிச்சை மற்றும் பராமரிப்பை வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூர் – டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் துறை தலைவர் டாக்டர் எல். ஸ்ரீனிவாசன் இது குறித்து தனது கருத்தை பகிர்ந்து கொள்ளும்போது,

“திருப்பூரில் உள்ள எங்கள் புதிய மருத்துவமனை, உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை கனிவோடும் மற்றும் துல்லியத்தோடும் வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புமிக்க பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையாகும்.செஞ்சுரியன் பாகோ இயந்திரம், சிரஸ் டோபோகிராஃபி மற்றும் நிடெக் OCT போன்ற அதிநவீன நோயறிதல் மற்றும் அறுவை சிகிச்சை தொழில்நுட்பங்களுடன்,கண்புரை மற்றும் கண்அழுத்தநோய்க்கான அறுவை சிகிச்சைகள் முதல் கருவிழிப்படலம், விழித்திரை மற்றும் விழியில் ஒட்டறுவை சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சைகளை வழங்க தேவையான அனைத்து வசதிகளும், திறன்மிக்க மருத்துவர்கள் குழுவும் இங்கு இருக்கின்றன.

அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் பயிற்சி பெற்ற துணை மருத்துவப் பணியாளர்களை உள்ளடக்கிய எங்கள் மருத்துவக் குழு மக்களுக்கு எளிதில் அணுகிப் பெறக்கூடியவாறு உயர்தரமான கண் சிகிச்சையை வழங்க உறுதிபூண்டுள்ளது.அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்புகளை வழங்குகிற உடல்நல பராமரிப்பு மீது நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, இலவச கண் பரிசோதனைகள், கல்விசார் பயிலரங்குகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் கூட்டாண்மை நடவடிக்கைகளையும் நாங்கள் தீவிரமாக மேற்கொள்வோம்.

இந்த புதிய மருத்துவமனையானது, திருப்பூரில் எங்கள் விரிவாக்க செயல்பாட்டை சுட்டிக்காட்டுகிறது. மேலும், கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் விரிவான, சிறப்பான தீர்வுகளை வழங்குவதன் மூலம் நம்பகமான ஒரு பிராண்டாக வளர நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் இயக்கச் செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் நந்த குமார் பேசுகையில்,

“டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில், உலகத்தரம் வாய்ந்த புத்தாக்கத்தையும், மருத்துவச் சேவைகளை எளிதாக பெறும் நிலையையும் எமது குறிக்கோளை அடைவதற்கு வழிகாட்டும் இரு கண்களாக நாங்கள் கருதுகிறோம். தமிழ்நாடு முழுவதும் 71 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை கொண்டு சேவையாற்றி வரும் நாங்கள் இந்த ஆண்டு புதிய மருத்துவமனைகளையும், டாக்டர் அகர்வால்ஸ் கண் கிளினிக்குகளையும் மாநிலம் முழுவதும் புதிதாக தொடங்குவதன் மூலம் ஒரு மிகப்பெரிய விரிவாக்கத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

திருப்பூர், சேலம் மற்றும் கோயம்புத்தூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களுக்கு எமது மிக நவீன கண் சிகிச்சையை கொண்டு வரும்போது, மிதமான கட்டணத்தில் மேம்பட்ட கண் சிகிச்சையை அனைவருக்கும் வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.

பிபிஎல்எஸ்எஸ்எஸ், ஐஎம்ஏ டிஎன்எஸ்பி மற்றும் பூஜா ஸ்கேன்ஸ் 4டி-ன் துணைத் தலைவர் டாக்டர் பி. கவிதாலட்சுமி, திறப்பு விழாவில் வரவேற்புரை வழங்கினர். திருப்பூர் நகரைச் சேர்ந்த பல முக்கிய ஆளுமைகளும், மருத்துவ நிபுணர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அவர்களுள் ஏவிபி அறக்கட்டளை நிறுவனங்களின் தலைவர் Rtn எம்.டி. பிடிஜி. ஏ. கார்த்திகேயன்; வேலவன் மெட்ரிக் மேனிலைப் பள்ளியின் தலைவர் Rtn. பிடிஜி. பி. இளங்குமரன்; ரேவதி மருத்துவ மையத்தின் டாக்டர் ஆர். ஈஸ்வரமூர்த்தி; திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி. பிரேமலதா; இந்திய மருத்துவச் சங்கத்தின் அவினாசி டெக்ஸ்சிட்டி கிளையின் தலைவர் டாக்டர் ரமணி; திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கே. என். தங்கராஜ்; மற்றும் இந்திய மருத்துவச் சங்கத்தின் அவினாசி டெக்ஸ்சிட்டி செயலாளர் டாக்டர் ஆர். பிரகாஷ் மற்றும் திருப்பூர் ஃபார்ச்சூன் பார்க் நிர்வாக இயக்குனர் கே. பி. கே. செல்வராஜ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மேலும் படிக்க