பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் 10 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு, அவை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.இந்த நிகழ்வு கோயம்புத்தூர்,அவினாசி சாலையில் உள்ள தி கிராண்ட் ரெஜென்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ மையங்களின் கட்டமைப்பு மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் கொடுக்கப்பட்டன,இதன் மூலம் கிராமப்புறங்களில் மக்கள் தரமான சுகாதார சேவைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வால்பாறை, சோலையார் நகர்,பெரியபோது, மற்றும் டாப்ஸ்லிப், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நெகமம், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்கட்டி, மற்றும் காரமடை ஒன்றியத்திற்குட்பட்ட காரமடை, சிறுமுகை, வெள்ளியங்காடு மற்றும் சீலியூர் ஆகிய சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன.
இந்த ஒப்படைப்பு விழாவில் பவன் குமார் ஜி கிரியப்பநவர் ஐ.ஏ.எஸ்.,மாவட்ட ஆட்சியர், டாக்டர் பி. பாலுசாமி மாவட்ட சுகாதார அதிகாரி,நவேத் நாராயண் தலைமை அதிகாரி,பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ் – கோயம்புத்தூர், ஷில்பா சிஎஸ்ஆர் தலைவர், பாஷ் குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜீஸ், மற்றும்ஏ.எஸ்.சங்கரநாராயணன் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்,நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும்,ஒன்றியம் மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள், முக்கிய பங்காளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.இந்த முயற்சி, பாஷ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர் வையும், நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை யின் கிராம மேம்பாட்டு பணிகளையும் வெளிப்படுத்துவதோடு,மக்கள் மேம்பட்ட சுகாதார சேவைகளை பெற உதவுகிறது.
புதிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கட்டமைப்புகளின் மூலம், இந்தியாவின் ஊரக பகுதிகளில் தரமான சுகாதார சேவைகள் பொது மக்களுக்கு சென்றடையும்.
ஆனைக்கட்டி கிராமப்புற மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்கிய மெகா மருத்துவ முகாம்
மாணவிகளுக்கான தனித்துவமான தொழில்முனைவு தயாரிப்பு திட்டமான ‘நிபுணி கரியர் பாத்திங்’ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்திய அவ்தார் குழுமம்
பிஜிஎஸ் மருத்துவமனையின் கோயம்புத்தூரில் 150 படுக்கைகள் கொண்ட பன்முக சிறப்பு மருத்துவமனை பிரமாண்ட திறப்பு விழா
த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ் என்னும் தலைப்பில் நடைபெற்ற கோவை ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா
கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு;பழைய நினைவுகளை பகிர்ந்து உற்சாகம்
தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது, புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் – கணபதி பி. ராஜ்குமார்