April 13, 2025
தண்டோரா குழு
மாற்றுத்திறனாளிகளுக்கான சீரான இடத்தை உருவாக்கும் நோக்கத்தில்,கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் ‘தர்ட் ஐ – ஆட்டிசம் மையம்’ (Third Eye – A Center for Autism) நிறுவனம், ப்ரூக் ஃபீல்ட்ஸ் மாலில் இன்று ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளி வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தியது.
பிரபல திரைப்பட நடிகையும் சமூக செயற்பாட்டாளருமான தகௌதமி தாடிமல்லா விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,தமிழில் தயாரிக்கப்பட்டுள்ள ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஆரம்ப கட்டத்திலேயே ஆட்டிசத்தை கண்டறிதலும், சமுதாய ஆதரவும், நரம்பியல் வேறுபாடுகளை புரிந்து கொண்டு ஏற்கும் எண்ணமும் மிக முக்கியம். மாற்றுத்திறனாளர்களை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்” என தெரிவித்தார்.
விழாவில் இடம் பெற்ற சில சிறப்பு அம்சங்கள்:
ஆட்டிசம் விழிப்புணர்வு இலவச ஆலோசனைகள்,குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான விளையாட்டு நிகழ்ச்சிகள்,
முகவரி ஓவியம் மற்றும் கலந்துரையாடல் அம்சங்கள்,சிறந்த ஆட்டிசம் குழந்தைகளின் “ஃபாஷன் வாக்” – குழந்தைகள் வண்ணமயமான ஹீரோக்களின் ஆடைகளிலும் பாரம்பரிய உடைகளிலும் திகழ்ந்தனர்.தாய்மார்களுடன் இணைந்து குழந்தைகள் ஆடிய ‘மோம் & கிட்’ நடன நிகழ்ச்சி – பார்வையாளர்களை ஈர்த்தது.
‘தர்ட் ஐ’ இயக்குநர் சரண்யா ரெங்கராஜ் விழாவில் உரையாற்றியபோது,
“இந்த விழிப்புணர்வு காணொளி வெறும் ஒரு பிரச்சாரம் அல்ல;இது, ஒவ்வொரு ஆட்டிசம் குழந்தையும் வளர முடியும், அவர்கள் தனித்துவமான பார்வையில் உலகத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை உலகிற்கு தெரிவிக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான முயற்சி. பெற்றோருக்காக நாம் சாட்பாட் வசதியையும் உருவாக்கியுள்ளோம்” என தெரிவித்தார்.
விழாவை முன்னெடுத்த தர்ட் ஐ நிறுவனத்தின் சார்பில், பங்கேற்ற அனைவருக்கும், ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும்,நண்பர்களுக்கும் சரண்யா ரெங்கராஜ் தனது நன்றியை தெரிவித்தார்.