April 14, 2025
தண்டோரா குழு
கோவை மேட்டுப்பாளையம் சாலை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பெட்ரோல் பங்க் அருகே அமைந்துள்ள ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தில் சித்திரை திருநாளை முன்னிட்டு,தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள்,பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தென்னிந்தியாவிலேயே நம்பர் 1 பிரபலமான ஜோதிடரும்,வாஸ்து நிபுணருமான ஆஸ்ட்ரோ மேஜிக் நிலையத்தின் நிறுவனர் டாக்டர் கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழ் புத்தாண்டு சித்திரை திருநாளில் , தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர்
சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.இந்த இடமானது பஞ்சபூதங்களின் நேர்மறை சக்திகளை கொண்ட இயற்கை சக்திமிக்க இடமாக அமையப் பெற்றுள்ளது.இவ்விடத்தில்
தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்த பின்னர், இங்கு வரும் பக்தர்களுக்கு பஞ்சபூத சக்தி உடலில் சமநிலையில் கிடைக்க பெற்று நேர்மறை ஆற்றல் கிடைப்பதால் குடும்ப அமைதி, செல்வ வளம், தொழில் முன்னேற்றம், வியாபார வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் மற்றும் அதிர்ஷ்டம் கிட்டும். பக்தர்களுக்கு 1,00,008 முறை அர்ச்சனை செய்யப்பட்டு 108 நாள் பூஜையில் வைத்த தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் நாணயம் ரூ.300 செலுத்தி நாணயங்களை நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், ஜோதிட மற்றும் வாஸ்து சேவைகளுக்காக லின் கான் விருதும் எனக்கு வழங்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது என்றார்.