April 16, 2025
தண்டோரா குழு
கீர்த்திலால்ஸ் குழுமத்தின் நவீன வைர ஆபரண பிராண்டான க்ளோ பை கீர்த்திலால்ஸ் (Glow by Kirtilals) திருப்பூர் மாநகரில் அதன் புதிய பிரத்யேக ஷோரூமை திறந்திருக்கிறது.
இந்த ஷோரூம் தொடங்கப்பட்டிருப்பதன் வழியாக,தமிழ்நாட்டில் அதி வேகமாக வளர்ந்து வரும் நகரங்களுள் ஒன்றான திருப்பூர் வாழ் மக்களுக்கு அழகான மெல்லிய எடை கொண்ட மற்றும் பன்முகத் திறன் கொண்ட இயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்ட ஆபரணங்களில் தனது முத்திரை பதித்த தொகுப்பை கீர்த்திலால்ஸ் வழங்குகிறது.ஸ்டைலையும் பாரம்பரியத்தையும் மதித்துப் போற்றும் நவீன பெண்ணுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் திருப்பூர் ஷோரும், காலத்தைக் கடந்து ஜொலிக்கும் வகை வடிவமைப்பின் கைவினைத்திறனை முழுமையான நவீன ஃபேஷன் உணர்வோடு உருவாக்கப்பட்ட ஆபரணங்களின் அற்புதமான அணிவரிசையை காட்சிப்படுத்துகிறது.
கீர்த்திலால்ஸ் குழுமத்தின் இயக்குனர் பிசினஸ் செயல்உத்தி சூரஜ் சாந்தகுமார் இதுகுறித்து கூறியதாவது:
“தனது தனித்துவமான ஆற்றல், படைப்பாக்கத்திறன் மற்றும் புதுமையான ஃபேஷன் உணர்வுகளுக்காக பிரபலமாக அறியப்படும் நகரான திருப்பூருக்கு க்ளோ அனுபவத்தை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் தரம். தினசரி பயன்படுத்தும் சௌகரியம் ஆகியவற்றை அங்கீகரித்துப் பாராட்டும் வாடிக்கையாளர்களுக்கு நவீன, தற்காலத்தைய வைர ஆபரணங்கள் எளிதாக கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற எமது விரிவாக்க செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஷோரூம் தொடங்கப்பட்டிருக்கிறது.
நம்பகத்தன்மை மற்றும் தனித்துவத்தை மதிக்கின்ற நுகர்வோர்களின் புதிய தலைமுறையின் பிரதிநிதியாக திருப்பூர் நகரம் திகழ்கிறது. இத்தகைய நவீன உணர்வை மதித்து பாராட்டும் எமது பதில்வினையாக க்ளோ நிறுவப்பட்டிருக்கிறது. இந்த ஷோரூம் வழியாக வெறுமனே ஒரு ரீடெயில் ஷோரூமை மட்டும் நாங்கள் தொடங்கவில்லை: நவீன பெண்கள், அவர்களது வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கின்ற நேர்த்தியான ஆபரணங்களை கண்டறிகின்ற ஒரு அமைவிடத்தை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.”
இந்த பிராண்டின் தனித்துவமான அழகியல் அம்சங்களை நேரில் கண்டு அனுபவ ரீதியாக உணர்வதற்காக திருப்பூர் நகரத்தைச் சேர்ந்த இந்த பிராண்டின் புரவலர்கள், விருந்தினர்கள் மற்றும் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்களை ஏப்ரல் 16 அன்று நடைபெற்ற மாபெரும் தொடக்கவிழா நிகழ்வு வரவேற்றது. தினசரி அணியக்கூடிய நகைகளிலிருந்து, விரிவான வடிவமைப்புகள் வரை நேர்த்தியான ஆபரணங்களின் கலெக்ஷனை இந்த ஷோரூம் வழங்குகிறது. அழகை இன்னும் மேம்படுத்திக் காட்டுகின்ற அழகான ஆபரணங்களை விரும்புகின்ற பெண்களின் விருப்பங்களை முழுமையாகப் பூர்த்திசெய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நோக்கத்திற்காகவே இந்த ஆபரணங்களின் அணிவரிசை உருவாக்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர், சென்னை, ஹைதராபாத், கொச்சி மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் ஏற்கனவே க்ளோ பை கீர்த்திலால்ஸ் ன் ஷோரூம்கள் சிறப்பாக இயங்கி வருகின்ற நிலையில், திருப்பூரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூம் அதனை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறது.