January 27, 2017
தண்டோரா குழு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் தமிழக வீரர் உள்பட 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே கடுமையான உறைபனி பெய்து வருகிறது. குரேஷ் செக்டார் பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
அவர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் (27) ஆவார். குரேஷ் பகுதியில் பனிச்சரிவில் புதைந்த மேலும் 4 ராணுவ வீரர்களின் உடல்கள் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.