• Download mobile app
20 Apr 2025, SundayEdition - 3357
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன – கமிஷனர் குரு பிரபாகரன் தகவல்

April 20, 2025 தண்டோரா குழு

கோவையை அடையாளம் காட்டும் வகையில் 300 கோடியில் அமைக்கப்படும் செம்மொழி புங்கா, நூலகம், கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் சனிக்கிழமை 19.4.2025 அன்று நடந்தது.

கிரெடாய் கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர்,சென்னைக்கு நிகராக கோவையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டு வருகின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முதன்மையான நகரமாக கோவை நகரம் மாறும். தினமும் 300 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கி வரும் பில்லூர் குடிநீர் திட்டத்தில், 400 மில்லியன் லிட்டராக உயர்த்த முடியும். கோவை நகரில் 200 கோடி ருபாய் செலவில் ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவை கோவை நகரின் தரத்தை மேலும் உயர்த்தும், என்றார்.

மேலும் அவர் பேசுகையில், அவிநாசி ரோடு மேம்பால திட்டம் விரைவில் முடிவு பெறும். மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கும். கோவையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்காக அரசு கோடிக்கணக்கில் முதலீடுகளை செய்து வருகிறது. திருநெல்வேலியில் நான் பணியாற்றியபோது, கிரெடாய் உடன் தொடர்பு ஏற்பட்டது. இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டபோதெல்லாம் இநு்த அமைப்பு உதவி வருகிறது. அதேபோன்ற அமைப்பு கோவையில் செயல்பட்டு வருகிறது. தனியார் பொதுத்துறை பங்களிப்புக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறது, என்றார்.

புதியதாக பொறுப்பேற்ற கிரெடாய் கோவை கிளையின் தலைவர் அர்விந்த்குமார் பேசுகையில், கிரெடாய் என்றலே, நம்பகமானது, மதிப்புமிக்கது; நிலையானது. ஏற்கனவே நிர்வகித்து வந்த அணியினர், சிறப்பாக பணியாற்றியுள்ளனர். புதிய நிர்வாகிகளும் அதை பின்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றுவர், என்றார்.
கிரெடாய் அமைப்பின் அடுத்த திட்டங்கள் குறித்து, பேசுகையில், கிரெடாய் கோவையின் நலனுக்காக பேர்புரோ கண்காட்சியை அனைவரும் எதிர்பார்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கனெக்ட் என்ற புதுமையான கட்டுமான பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. இவை தவிர நிறுவனங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், வணிக சந்திப்புகள், சுற்றுலாக்களையும் நடத்தி வருகிறது. கோவை மாஸ்டர் பிளான் திட்டத்துக்கு சரியான தீர்வுகளை வழங்கவும், கோவை நகர மேம்பாட்டுக்கு ஏற்பட்டு வரும் பிரச்னைகளுக்கும், கட்டுமான தொழில்துறைக்கு உள்ள சவால்களையும் எதிர்கொண்டு செயல்பட்டு வருகிறது.

உடனடி முன்னாள் தலைவர் குகன் இளங்கோ பேசுகையில், இந்த நான்கு ஆண்டுகளில் பொறுப்பில் இருந்தபோது நிறைய கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன. கோவையின் விரிவாக்கத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட பிற வசதிகளையும் அரசு ஏற்படுத்தி தர வேண்டும். இது குறித்த பல்வேறு ஆலோசனைகளையும், முக்கியத்துவத்தையும் அதிகாரிகளுக்கு கிரெடாய் எடுத்துச் சென்றுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும், என்றார்.

செயலாளர் சஞ்சனா விஜயக்குமார் நன்றி தெரிவித்து பேசுகையில், கிரெடாய் உடன், மதுரை, சேலம், ஒசுர், மற்றும் திருநெல்வேலி கிளைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம், என்றார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) கோவை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வு, பொறுப்பேற்கும் நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள தாஜ் விவாந்தா ஹோட்டலில் சனிக்கிழமை 19.4.2025 அன்று நடந்தது. அரிமா கன்ஸ்ட்ரக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர் அர்விந்த்குமார் தலைவராக பொறுப்பேற்றார்.

ஸ்ரீவத்ஸா ரியல் எஸ்டேட் பி லிமிடெட் இணை நிர்வாக இயக்குனர் ராஜிவ் ராமசாமி புதிய துணைத்தலைவராகவும், டிஎன்சிடி எல்எல்பி நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் சனஜா விஜயக்குமார் புதிய செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.

ஸ்ரீவாரி இன்பிராஸ்ட்ரக்சர் பி லிமிடெட் நிர்வாக இயக்குனர் மதன் பி லுந்த் இணை செயலாளராகவும், அனன்யா ஷெல்டர்ஸ் பி லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் கார்த்திக் குமார் புதிய பொருளாளராகவும் பொறுப்பேற்றனர்.

மேலும் படிக்க