April 22, 2025
தண்டோரா குழு
உலக புவி தினத்தை முன்னிட்டு கோவை கருமத்தம்பட்டி பகுதியில் ஜெஸ்ஸி மிஸ் கோச்சிங் அகாடமி மற்றும் ஹரி மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது.
புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் உலக புவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்நிலையில் கோவையில் உலக புவி தினத்தை முன்னிட்டு கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் முதன் முறையாக பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய தகவல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜெஸ்ஸி மிஸ் கோச்சிங் அகாடமி எனும் ஜே.எம்.சி.அகாடமி மற்றும் ஹரி கண் மற்றும் பொது மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்திய இதில்,புவி தினத்தை முன்னிட்டு, மரக்கன்று நடும் நிகழ்வுகள், சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், மறுசுழற்சி போன்ற செயல்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முன்னதாக புவியின் வெப்பம் அதிகரிப்பதால் பொதுமக்கள் போதுமான அளவு நீர் பருக வேண்டும் என்பதை கூறும் விதமாக நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு அனைவருக்கும் நீர் மோர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து கருமத்தம்பட்டி பகுதியில் விரைவில் துவங்கப்பட உள்ள ஜெ.எம்.சி. அகாடமி குறித்து மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே எடுத்து கூறப்பட்டது.
நிகழ்ச்சியில், ஜே.எம்.சி.அகாடமி இயக்குனர்கள் விக்டர் ஜார்ஜ்,ஜெசிந்தா லீமா ரோஸ்,ஹரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் கவிதா பாஸ்கரன், ஹோலி ரோசரி மெட்ரிக் பள்ளியின் முதல்வர் வர்கீஸ் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.