April 28, 2025
தண்டோரா குழு
கோவையில் வரும் ஏப்ரல் 30 ந்தேதி துவங்கி மே 04 ந்தேதி வரை நடைபெற உள்ள பேரின்ப பெருவிழாவில் பலவிதமான ஆராதனைகள்,பாடல்கள், மற்றும் பிரசங்கங்கள் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
கோவையில் இயேசுவின் அன்பின் ஊழியம் சார்பாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேரின்பப் பெருவிழா எனும் கிறிஸ்தவ ஆராதனை நிகழ்ச்சியை அதன் தலைவர் ஜவஹர் சாமுவேல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பேரின்ப பெருவிழா வரும் ஏப்ரல் 30 ந்தேதி துவங்கி மே 4 ந்தேதி வரை ஐந்து நாட்கள் கூட்செட் சாலை சி.எஸ்.ஐ.பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது
இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கோவை பேரின்பப் பெருவிழா நிகழ்ச்சியின் தலைவர் ஜவஹர் சாமுவேல் செய்தியாளர்களிடம் பேசினார்.
கோவை நகரில் உலக அமைதி வேண்டியும், அனைவரின் துன்பங்கள் விலகும் வகையில்,கிறிஸ்தவ விழாவாக நடைபெறுவதாக தெரிவித்தார்.இதில் அனைத்து கிறிஸ்தவர்கள் வேறுபாடின்றி கலந்து கொள்வதாக கூறிய அவர்,சுமார் இருபதாயிரம் பேர் வரை இதில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.
பேரின்பப் பெருவிழா என இயேசுவை போற்றும் ஒரு கிறிஸ்தவ விழாவாக நடைபெற உள்ளஇதில் பலவிதமான ஆராதனைகள், பாடல்கள், மற்றும் பிரசங்கங்கள் இடம்பெறும் என அவர் கூறினார்.மேலும் நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு தேவையான பார்க்கிங் வசதி,அமர்வதற்கான இருக்கைகள், மருத்துவ வசதி,என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது,டேனியல் ஜவஹர் சாமுவேல் மற்றும் பிஷப் பெக்சல் ஜேக்கப் ஆகியோர் உடனிருந்தனர்..