January 28, 2017
தண்டோரா குழு
குஜராத் மாநிலத்தில் சனிக்கிழமை (ஜனவரி 28) அதிகாலையில் லாரியுடன் நேருக்கு நேராக கார் மோதியது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தாராபூர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர், பண்டோர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
குஜராத் மாநிலத்தில் உள்ள போடாட் நகரில் திருமணத்திற்கு ஒரு குடும்பத்தை சேர்த்த ஆறு பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். தாராபூர் வடமன் நெடுஞ்சாலையில் எதிரே வந்த சரக்கு வண்டியுடன் நேருக்கு நேராக மோதியதில் 5 வயது குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காரில் இருந்த நீட்டா தொபாரியா (32), ஆசிஷ் (27), மந்தன் (5) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்த விபத்தை குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அந்த விபத்தில் படுகாயம் அடைந்த சேத்தன் தொபாரியா (32) அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மனிஷா மற்றும் விபுல் தொபாரியா ஆகிய இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.