January 30, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வகைப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் காலஅவகாசம் அளித்துள்ளது.
தமிழகத்தில் விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்குத் தடை விதிக்கக் கோரி, வழக்குரைஞர் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கவுல் தலைமையில் திங்கட்கிழமை (ஜனவரி 30) நடைபெற்றது. அப்போது வீட்டுமனைகளை வகைப்படுத்த, தமிழக அரசு சார்பில் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளைப் பத்திரப் பதிவு செய்ய, பதிவுத் துறைக்குத் தடை விதித்ததோடு தமிழக அரசுக்கு பிப்ரவரி 27 ம் தேதி வரை அவகாசம் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.