January 31, 2017
newindianexpress.com
பஞ்சாப் மாநிலத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த 2 மர்ம படகுகளை எல்லைப் பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து எல்லை பகுதி பாதுகாப்பு அதிகாரி கூறுகையில் “ பஞ்சாபில் உள்ள ரவி நதிக்கரையில் உள்ள டோடா குரு பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான இரண்டு மர்ம படகுகளை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இப்பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் மர்ம படகுகளை கைப்பற்றுவது நான்காவது முறையாகும். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம்”’.என்றார்
அக்டோபர் மாதத்தில் இதே பகுதியில் ஒரு பாகிஸ்தான் படகை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.