January 31, 2017
தண்டோரா குழு
விபத்தில் சிக்கி நடிகை சனுஷா மரணம் அடைந்துவிட்டதாக, சமூகவலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவி வருகிறது.
பீமா, ரேணிகுண்டா, அலெக்ஸ்பாண்டியன் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை சனுஷா. இவர் கார் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப்பில்வதந்தி தீயாக பரவி வருகிறது. அவர் விபத்துக்குள்ளான கார் என்று கூறி, சேதமடைந்த கார் ஒன்றின் படமும் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பலரும் சனுஷாவுக்கு தொடர்ந்து போன் செய்து வருகிறார்கள்.
சனுஷாவின் பெற்றோர்களோ வதந்தி பரப்பியவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இது குறித்து புகார் செய்ய உள்ளதாகவும்அவர்கள் தெரிவித்துள்ளனர்.