February 1, 2017
தண்டோரா குழு
கேரள மாநிலம் மலப்புரம் மக்களவை உறுப்பினர் இ.அகமது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை டிவிட்டரில்,” கடின உழைப்பின் மூலம் தேசத்திற்கு சேவையாற்றிய மூத்த அரசியல் தலைவர் அகமது. மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்த முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது.”என்றார் .
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரையின் போது கேரள மாநிலம் மலப்புரம் பகுதி மக்களவை உறுப்பினர் இ. அகமது மயங்கி விழுந்தார்.
இதனையடுத்துஅவர் உடடினயாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது .இருப்பினும் மாரடைப்புகாரணமாக சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.