February 3, 2017 தண்டோரா குழு
புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்காளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் திடீரென தீப்பற்றியது. ஆனால், அது உடனடியாக அணைக்கப்பட்டது.
இது குறித்து புதுதில்லி தீயணைப்புத் துறை அதிகாரி செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
“புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணக்காளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் திடீரென தீப்பற்றியது.
இச்சம்பவம் குறித்து காலை 8.45 மணியளவில் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பட்டன. அவர்கள் அங்கு விரைந்து பத்து நிமிடங்களில் தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் அறையில் இருந்த பொருள்கள் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக, உயிர்ச் சேதம் எதுவும் இல்லை. குறுகிய மின்னழுத்ததால் இந்தச் சம்பவம் நடந்தது என்று சந்தேகிக்கிறோம். இருப்பினும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
நடப்பாண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் முன் நாடாளுமன்றத்தில் உள்ள கணினி அறையில் தீ பற்றியதால் அங்கிருந்தவர்கள் பீதிக்கு ஆளாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.