• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெங்களூரில் மர்ம நபர் துப்பாக்கி சூடு

February 3, 2017 தண்டோரா குழு

பெங்களூர் புறநகர்ப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம மனிதர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காரில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பெங்களூர் நகரம் முழுவதும் பாதுகாப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

பெங்களூர் நகரில் வேளாண் உற்பத்தி சந்தை கமிட்டியின் (APMC) தலைவர் கே. ஸ்ரீநிவாஸா. அவர் சம்பவத்தின் போது பயணித்த ஹோண்டா சிட்டி கார் போக்குவரத்து சிக்னலில் காத்து நின்றபோது, மோட்டார் வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் அந்த காரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். படுகாயம் அடைந்த ஸ்ரீநிவாஸாவையும் அவருடைய கார் ஓட்டுநரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

2௦13-ம் ஆண்டு கொலை மற்றும் தொடர் குற்றங்களுக்காக ஸ்ரீநிவாஸா கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க