February 3, 2017 தண்டோரா குழு
கோவையில் அரசு மருத்துவமனையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மேலும் 12 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட கணபதியைச் சேர்ந்த சிவசக்தி (35), காரமடையைச் சேர்ந்த ஜெயராமன் (67), பழனிசாமி (58), செல்வபுரத்தைச் சேர்ந்த சாய்ரா பானு (57), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் (58), ஸ்ரீபதி (25) ஆகியோர் கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, சரவணம்பட்டியைச் சேர்ந்த நிக்சன் (44), வடமதுரையைச் சேர்ந்த ஜானகி (55), உக்கடத்தைச் சேர்ந்த ராமசாமி (75), குனியமுத்தூரைச் சேர்ந்த அஜ்மு நிஷா (77) ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் வயிற்றுப் போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதைப் போல், உக்கடத்தைச் சேர்ந்த அரீபா (28), பழனியைச் சேர்ந்த ரஞ்சனி (25), கணுவாய்ப் பகுதியைச் சேர்ந்த லக்ஷிதா (5 மாதம்) ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கோவை ரத்தினபுரியைச் சேர்ந்த ஆத்திகா (12), கணபதியைச் சேர்ந்த பிரசாந்த் (22), சூலூரைச் சேர்ந்த பகத் அக்ஷ் (10), பொள்ளாச்சியைச் சேர்ந்த வானதி (7), திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராகவி (8), சத்தியப்பிரியா (10), யமுனா (7), கலைச்செல்வி (25) ஆகியோர் தீவிர காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.