February 4, 2017 தண்டோரா குழு
ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழை அனுமதிக்க புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடையுத்தரவுக்கு அமெரிக்காவின் ஃபெடரல் கோர்ட் தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் மாநிலங்களில் உயர் நீதிமன்றங்களுக்கு மேல் வாஷிங்டனில் உள்ளது ஃபெடரல் கோர்ட் எனப்படும் மிக உயர்ந்த உச்ச நீதிமன்றம் ஆகும். டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வாஷிங்டன் அட்டர்னி ஜெனரல் பாப் பெர்கூசன் வழக்குத் தொடுத்தார். அதை ஏற்று இந்த நீதிமன்றம் அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தடை விதிப்பதாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், இராக், சிரியா, சூடான், சோமாலியா, லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா அதிபர் 90 நாட்கள் தடை விதித்துள்ளார். அது மட்டுமின்றி, சிரியா அகதிகள் அமெரிக்காவில் நுழைய நிரந்தர தடையையும் அதிபர் விதித்தார்.
டிரம்பின் இந்த உத்தரவை அடுத்து அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு, அவரவர் நாடுகளுக்குத் நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.
அதிபரின் இந்த நடவடிக்கை அமெரிக்காவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அதை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.