தேவையான பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் – பத்து (கொட்டை நீக்கி, துருவியது).
பாசுமதி அரிசி – ஒரு கப் (இருபது நிமிடம் ஊறவைத்தது).
துருவிய தேங்காய் – கால் கப்.
பச்சை மிளகாய் – இரண்டு.
எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்.
உப்பு – தேவைகேற்ப.
வேர்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்.
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை
ஊறவைத்த பாசுமதி அரிசியை உதிரிஉதிரியாக சாதம் வடித்து எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேர்கடலை, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும்.பாசுமதி வடித்த சாததை வதக்கிய கலவையில் கொட்டி உதிரி உதிரியாக கிளறவும்.கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
திருப்பூரில் பிரத்யேக வைர மற்றும் தங்க ஆபரண ஷோரூமை க்ளோ பை கீர்த்திலால்ஸ் தொடங்கியுள்ளது
கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டோரா லாசிக் அறுவை சிகிச்சை அறிமுகம்
தொழில்நுட்ப முன்னேற்றத்துடன் தமிழகத்திலும் கேரளாவிலும் ப்யூர் பவர் அறிமுகம்
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்