February 6, 2017 findmytemple.com
சுவாமி : அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர்.
அம்பாள் : அருள்மிகு மங்களாம்பிகை.
மூர்த்தி : வலஞ்சுழி விநாயகர், நடராஜர், சோமாஸ் கந்தர், அஷ்டலிங்கங்கள், பிச்சாடணர், மகாலெட்சுமி, அன்னபூரணி, கிராத மூர்த்தி, சூரியன், சந்திரன், சப்த கன்னிகள், நவக்கிரகம், கும்ப முனிவர்.
தீர்த்தம் : சூரதீர்த்தம்.
தலவிருட்சம் : வன்னி மரம்.
தலச்சிறப்பு :
பிரளய காலத்தில் பெரு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அமுத கும்பம் இத்தலத்தில் தங்கியது. அப்போது சிவபெருமான் பூத கணங்களை வேடவன் உருவில் தம்முடன் வரப்பணித்துத் தாமும் வேட்டுவ உருவுடன் இத்தலத்தின் வடகிழக்குப் பாரிசத்தில் உள்ள பாணபுரத்தில் எழுந்தருளி, அம்பினால் அமுத குடந்தை உடைத்தார்.
கும்பம் உடைந்து அமுதம் நனைந்த மணலை லிங்க வடிவமாக்கி ஆதிகும்பேஸ்வரர் எனக் காட்டியருளினார். சக்தி பீடங்களில் முதன்மையான மந்திர பீடேஸ்வரி – மங்கள நாயகி திவ்ய மங்கலத்தை அளித்து வருகிறார். ஒருமுறை கங்கை முதலான ஒன்பது புண்ணிய நதிகளும் சிவபெருமானிடம், “எங்களிடம் நீராடுவோர் விட்டுச் செல்லும் பாவங்களை, நாங்கள் எங்கு சென்று கழிப்பது” எனக் கேட்க, சிவபெருமான் கும்பகோணத்திற்குச் சென்று மகாமக குளத்தில் நீராடினால் கழியும் எனக் கூறினார்.
இப்புராணத்தை யொட்டி மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று மகத் திருவிழா நடைபெறுகிறது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும், மாசி மகநட்சத்திரத்தினை மகாமகம் என வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். இது ஒரு தேசியத் திருவிழாவாகும். இந்தியாவெங்கிலும் இருந்து மக்கள் இவ்விழாவிற்கு வருவர். பதினெண் சித்தர்களின் ஒருவரான கும்ப முனிவரின் கோயில் நிருதி மூலையில் உள்ளது. மகா மகத்திற்கு ஆதிகும்பேஸ்வரரும் எழுந்தருளுவார்.
வழிபட்டோர் : கும்பமுனி, திருஞானசம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர்.
பாடியோர் : சம்பந்தர், அப்பர், அருணகிரிநாதர்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
பூஜை விவரம் : ஆறு கால பூஜை.
திருவிழாக்கள் :
சித்திரை – சப்தஸ்தான திருவிழா,
வைகாசி – திருக்கல்யாணம்,
புரட்டாசி – நவராத்திரி,
மார்கழி – திருவாதிரை,
மாசி – மகப் பெருந்திருவிழா,
பங்குனி உத்திரத்தன்று மகாமககுளத்தில் தெப்பம்.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோவில்,கும்பகோணம் – 612 001, தஞ்சை மாவட்டம்.